பக்கம் எண் :

சீறாப்புராணம்

654


முதற்பாகம்
 

என்னும் தங்க நாணயங்களைக் கொடுத்து வரிசை வரிசையாக அழகிய செழிய பொன்னினால் சிகரங்களையுடைய மண்டபங்களைச் செய்து சுற்றும் மதிள்களைச் செவ்வையாய் வைத்து வாயிலின் கண் விரிந்த கிரணங்களை யுடைய கதவைச் சேரப் பண்ணிப் பல வீதிகளையும் செய்தார்கள்.

 

1743.பந்தரிட் டலர்க ணாற்றிப் பருமணிக் கலன்க டூக்கிச்

    சந்தனம் பனிநீர் சிந்தித் தரைமெழுக் கெறிந்து சோதி

    யந்தரத் துடுவின் கூட்ட மனைத்தும்வந் தடைந்த தென்னச்

    சிந்துவெண் டரள ராசி செறித்தலங் காரஞ் செய்தார்.

85

      (இ-ள்) அவ்விதஞ்செய்து பந்தர்களிட்டுப் புஷ்பமாலைகளைத் தூக்கிப் பருத்த இரத்தின வர்க்கங்களை யுடைய ஆபரணங்களை நாலா பக்கங்களிலும் நாலும்படி செய்து சந்தனத்தையும் பனிநீரையும் தரையின்கண் சொரிந்து மெழுகி ஆகாயத்திலுள்ள நட்சத்திரக் கூட்டங்களியாவும் பிரகாசத்தை எவ்விடங்களிலும் வீசி வந்து சேர்ந்தன போலச் சமுத்திரத்தின் கண் ணுற்பத்தியான வெள்ளிய முத்தினது கூட்டங்களைச் சேர்த்து அலங்காரஞ் செய்தார்கள்.

 

1744.கண்படைத் தவர்க ளியாருங் கண்டதி சயிப்பக் காந்தி

    விண்படர் மாட வாயின் வெளியினிற் படங்கு கோட்டிப்

    பண்பட ரிசையின் வாய்ந்த பழக்குலைக் கதலி நாட்டி

    மண்பட ருலகி னில்லா வளம்பல செய்வித் தாரால்.

86

      (இ-ள்) அன்றியும், கண்களைப் படைக்கப் பெற்றவர்களான யாவர்களும் அக்கண்களினாற் பார்த்து ஆச்சரியப்படும்படி பிரபையானது ஆகாயத்தின்கண் படரா நிற்கும் மாளிகையினது வாயிலின் வெளியில் பெரிய கொடிகளை வளைத்துக் கட்டி மண்ணானது விரியப் பெற்ற இசைகளைப் போலும் பொருந்திய பழக்குலைகளையுடைய வாழை மரங்களை நிறுத்தி அகன்ற இம்மண்ணுலகின்கண் ஒரு காலத்திலும் இல்லாத பல வளங்களைச் செய்தார்கள்.

 

1745.மேதினித் துறக்க மென்ன விடுதிக ளியற்றி யோதும்

    வேதியர் குழுவும் வெள்வேல் வீரர்க டலைவ ரோடு

    மேதமில் திமஸ்கில் வாழு மிறைவனை யெதிரிற் காணக்

    காதலித் தினத்தி னோடு மபூசகல் கடிதிற் போனான்.

87

      (இ-ள்) அபூஜகிலென்பவன் அவ்வாறு பூலோகச் சுவர்க்கமென்று சொல்லும் வண்ணம் விடுதிகளைச் செய்வித்துக் குற்றமற்ற திமஸ்கு நகரத்தின்கண் வாசஞ் செய்யும் ஹபீபரசனை எதிராய்க் காணும்படி ஆசித்து ஓதா நிற்கும் வேதியர்களின்