பக்கம் எண் :

சீறாப்புராணம்

655


முதற்பாகம்
 

கூட்டத்தோடும் வெள்ளிய வேலாயுதத்தையுடைய வீரர்களின் தலைவர்களோடும் தனது குடும்பத்தார்களோடும் சீக்கிரமாய்ச் சென்றான்.

 

1746.மாலமர் நகர மாக்க ளபூசகல் மரபி னோடு

    நால்வகைப் பதாதி சூழ நனிபல திறைக ளீய்ந்து

    நீலவா ருதியே யன்ன நெடும்படைக் கடலி னாப்பண்

    காலைவெங் கதிரிற் றோன்றுங் கபீபெனு மரசைக் கண்டார்.

88

      (இ-ள்) அவ்விதம் செல்லவே பெருமை தங்கிய திருமக்கமா நகரத்திலுள்ள மனுஷியர்கள் அபூஜகிலினது கிளையார்களோடும் இரதம், கஜம், துரகம், பதாதியென்னும் நான்கு வகை சேனைகளும் வளையும் வண்ணம் மிகுதியான பல அரசிறைகளைக் கொடுத்து நீல நிறத்தையுடைய சமுத்திரத்தைப் போன்ற நெடிய சேனையாகிய கடலின் நடுவில் உதய காலத்தினது சூரியனைப் போலப் பிரகாசிக்கும் ஹபீபென்று சொல்லும் இராஜனைக் கண்டார்கள்.

 

1747.கண்டுகண் குளிர நோக்கிக் கரஞ்சிரங் குவித்துக் கான

    வண்டம ரலங்கற் றிண்டோண் மன்னவர் மருங்கு நிற்பத்

    தெண்டிரைப் புவனங் காக்குந் திறல்வலி யரசர் கோமான்

    விண்டநல் லுரையி னோடு மிருமென விரைவிற் சொன்னான்.

89

      (இ-ள்) அவ்வாறு கண்டு தங்களின் இரண்டு கண்களும் குளிரும்படிப் பார்த்து இரு கைகளையும் தலையின்கண் குவியச் செய்து கானகத்தினது தேனீக்கள் தங்கா நிற்கும் மாலையணிந்த திண்ணிய புயங்களையுடைய அரசனான ஹபீபென்பவனின் பக்கத்தில் நிற்கவே தெள்ளிய சமுத்திரத்தைக் கொண்ட இப்பூலோகத்தைக் காப்பாற்றும் தைரியமான வலிமையை யுடைய இராஜாதிபனாகிய அவ்வபீபரசன் சொல்லிய நல்ல வார்த்தைகளோடும் இருங்களென்று விரைவாய்ச் சொன்னான்.

 

1748.போதலர் கழனி சூழ்ந்த திமஸ்கினைப் புரந்த வேந்துங்

    கோதறு மக்க மென்னுங் கொழும்பதித் தலைவ மாரு

    மாதரத் துடனு மொன்றா யளவளா மகிழ்ச்சி பொங்கிப்

    பேதமின் மனத்த ராகிப் பிரியமுற் றெழுந்தா ரன்றே.

90

      (இ-ள்) அவ்விதம் சொல்லிய புஷ்பங்கள் விரியா நிற்கும் வயல்கள் சூழப்பெற்ற திமஸ்கு நகரத்தைக் காக்கும் அரசனான ஹபீபென்பவனும் குற்றமற்ற மக்கமென்று சொல்லும் செழிய நகரத்தினது தலைவர்களும் அன்போடும் ஒன்றாய்க் கலந்து