முதற்பாகம்
முடிவில்லாத
நாயகனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் தூதராகுமென்று
சொல்லி இருதயத்தின்கண் துதிக்கப்பட்டவர்கள்
சொர்க்கலோகம் போய்ச் சேர்வார்கள்.
1984. மலையென நிமிர்மதிட்
திமஸ்கு மன்னவர்
நிலைகுலை மனத்தபூ சகல்த னெஞ்சினிற்
கலைமறை தெளிவினுங் கார ணத்தினும்
பலதர முரைத்துத்தம் பதியை நோக்கினார்.
11
(இ-ள்) மலைகளைப் போலும் உயர்ந்த
கோட்டை மதில்களையுடைய திமஸ்கு நகரத்தினது
மன்னவராகிய ஹபீபென்பவர் தனது நிலைகுலைந்த
மனத்தையுடையவனான அபூஜகி லென்பவனின் நெஞ்சினிடத்து
வேதசாஸ்திரங்களின் தெளிவினாலும் காரணங்களினாலும்
பல தடவை கூறித் தமது நகராகிய திமஸ்குப்பதியை
நோக்கினார்.
1985. மதகரி யிருபுற நெருங்க
மாப்படை
கதழ்வொடுங் கதியொடுங் கனைத்து முன்செலப்
பதலையு முரசமும் பம்பக் கானக
நதிகளுங் கடந்தய னடந்து போயினார்.
12
(இ-ள்) அவ்வாறு நோக்கிய அவர்
மதங்களை யுடைய யானைகள் இரு பக்கங்களிலும் நெருங்கவும்,
குதிரைப் படைகள் உக்கிரத்தோடும், மல்லம், மயூரம்,
வியாக்கிரம், வானரம், இடபமென்னும் ஐங்கதிகளோடும்
கனைத்துக் கொண்டு முன்னே செல்லவும், பதலைகளும்
முரசங்களும் சத்திக்கவும், கானகத்தின் கண்ணுள்ள
நதிகளையும் தாண்டி அப்புறம் நடந்து சென்றார்.
1986. கரித்திர
ளொலித்தகம் பலையுங் காவளர்
பரித்திர ளொலித்தகம் பலையும் பண்முர
சிரைத்ததுந் தீன்கலி மாவை யின்புற
வுரைத்திடுந் தொனிக்கட லுடைத்துக் காட்டுமால்.
13
(இ-ள்) யானைக் கூட்டங்கள்
சத்தித்த ஓசையும், சோலையின் கண் வளரா நிற்கும்
குதிரைக் கூட்டங்கள் சத்தித்த ஓசையும், கீதத்தைக்
கொண்ட முரசங்கள் சத்தித்த ஓசையும், தீனுல்
இஸ்லாமென்னும் மெய் மார்க்கத்தினது லாயிலாஹ
இல்லல்லாகு முஹம்மதுர்ற சூலுல்லாஹி யென்னுங் கலிமாவை
இனிமையுடன் ஓதிய ஓசையும், சமுத்திரத்தினது ஓசையைக்
கொடுத்துக் காட்டா நிற்கும்.
1987. கனியினுந் தேனினுங்
காய்த்த பாகினு
மினியன புதுமறை யியற்று நாவினர்
நனிபல சூழ்வர நகரை நண்ணினார்
பனிவரை யினும்புகழ் பரித்த பான்மையார்.
14
|