முதற்பாகம்
(இ-ள்) இமய மலையைப் பார்க்கிலும்
மிகுந்த கீர்த்தியைத் தாங்கிய பான்மையை யுடையவரான
ஹபீபென்பவர் பழத்திலும், தேனிலும், வற்றிய பாலிலும்
மிஞ்சிய இன்பத்தை யுடையதாகிய புதிய புறுக்கானுல்
அலீமென்னும் வேதத்தை ஓதுகின்ற நாவையுடையவர்களான தமது
பரிவாரங்கள் மிகவும் தம்மைச் சூழ்ந்து வரும் வண்ணம்
தம் பதியாகிய திமஸ்கு நகரத்திற் போய்ச்
சேர்ந்தார்.
1988. விண்ணுறை கொடிமதிட்
திமஸ்கு மேவிய
வண்ணலும் பதிமுதி யவருக் கன்பொடு
பண்ணருந் தீன்மொழி பயிற்றி நன்னெறி
யெண்ணிலை பெறவிசு லாமி லாக்கினார்.
15
(இ-ள்) ஆகாயத்தின்கண் சென்று
தரியா நிற்கும் கொடிகளைப் பெற்ற கோட்டை மதிலை யுடைய
திமஸ்கு நகரத்தை அவ்வாறு போய்ச் சேர்ந்த அண்ணலாகிய
ஹபீ பென்பவர் அன்புடன் தமது நகரத்திலுள்ள வயதால்
முதிர்ந்தோர்களுக்குக் கீதத்தைக் கொண்ட அருமையான
தீனுல் இஸ்லாமென்னும் மெய் மார்க்கத்தினது
வசனங்களைக் கற்பித்துச் சித்திக்கும் நல்ல
சன்மார்க்கத்தின் நிலைமையைப் பெறும் வண்ணம் தீனுல்
இஸ்லாத்தி லாகும்படி செய்தார்.
1989. தீன்முறை நடத்திய
திமஸ்கு மன்னவர்
மான்மதங் கமழ்ந்தமெய் நபிக்கு மாசிலாப்
பான்மதிக் கலைக்கலை பணிபொன் பட்டிவை
கூன்வெரிந் தொறுவினிற் கொடுத்த னுப்பினார்.
16
(இ-ள்) அவ்வாறு தீனுல்
இஸ்லாமென்னும் மார்க்க முறைமையைத் தமது
பட்டணத்தின்கண் நடாத்திய திமஸ்கு நகரத்தினது
மன்னவரான ஹபீபென்பவர் கஸ்தூரி வாசனை கமழப் பெற்ற
காத்திரத்தை யுடைய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுக்குக் குற்றமற்ற பால்
போலும் சந்திரக் கிரணங்களை நிகர்த்த வஸ்திரம்,
ஆபரணம், கனகம், பட்டு இவைகளை வரிசையாக வளைந்த
முதுகையுடைய ஒட்டகத்தில் ஏற்றிக் கொடுத்தனுப்பினார்.
1990. நிதிமணி பணிபல
நிறைந்த வொட்டகப்
பொதிபதிற் றொடுபரற் புடவி நீந்திவான்
மதிநடந் துலவிய மக்க மாகிய
பதியினுக் கடுத்தொரு பாலுற் றாரவர்.
17
(இ-ள்) பொன், இரத்தினம்,
ஆபரணமாகிய இவைகள் பல நிறைந்த ஒட்டகப்
பொதிபத்தோடும் அவற்றைக் கொண்டு
|