பக்கம் எண் :

சீறாப்புராணம்

745


முதற்பாகம்
 

வரப்பட்ட அவர்கள் பரற் கற்களையுடைய காடுகளைக் கடந்து வானலோகத்தின்கண் சஞ்சரியா நிற்கும் சந்திரனானது நடந்து உலவப் பெற்ற மக்கமாகிய நகரத்திற்குச் சமீபித்து ஓர் தானத்தில் வந்து சேர்ந்தார்கள்.

 

1991. அருமறை நபிமுகம் மதுவுள் ளன்புறக்

     குருமணி யொடுநிதி திமஸ்கிற் கொற்றவர்

     வரவிடுத் தனரென வழங்கும் வாசகந்

     தெரிதர அபூசகல் செவியிற் சார்ந்ததே.

18

      (இ-ள்) அருமையான புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையுடைய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் மனமானது அன்பைப் பொருந்தப் பிரகாசத்தைக் கொண்ட இரத்தினங்களோடு மற்றும் திரவியங்களைத் திமஸ்கு நகரத்தினது மன்னவராகிய ஹபீபென்பவர் வரவிடுத்தாரென்று கூறும் சமாச்சாரமானது விளங்கும் வண்ணம் அபூஜகி லென்பவனின் காதுகளிற் சார்ந்தது.

 

1992. மடித்தசிந் தையினெழுந் தேகி மன்னவன்

     கொடுத்தனுப் பியநிதிக் குவையும் பண்டமும்

     விடுத்ததிங் கெமக்கென வெகுண்டு வெஞ்சொலாற்

     றடுத்தடுத் தனைபூ சகுலென் பானரோ.

19

      (இ-ள்) அவ்வாறு சாரவே, அபூஜகி லென்பவன் வஞ்சகத்தைக் கொண்ட மனத்தோடு மெழுந்து சென்று மன்னவனான ஹபீபென்பவன் கொடுத்தனுப்பிய பொற்குவையும்; மற்றுமுள்ள பண்டங்களும் இவ்விடத்திற்கு விட்டது எமக்கென்று சொல்லிக் கோபித்துக் கொடிய வார்த்தைகளால் தடுத்து அவைகளின் சமீபத்தில் நெருங்கினான்.

 

1993. கபீபர சனுப்பிய கனக மியாவையு

     மபூசகல் தடுத்தன னென்ன வாதிநூற்

     புவியினில் விளக்கிநற் புகழ்ந டாத்திய

     நபிதிரு முனஞ்சிலர் நவின்றிட் டாரரோ.

20

      (இ-ள்) ஹபீபரசர் அனுப்பிய நிதிகளெல்லாவற்றையும் அபூஜகி லென்பவன் அவ்வாறு தனை செய்தானென்று சில ஜனங்கள் யாவற்றிற்கும் முதன்மையனான ஜல்லஜலாலகு வத்த ஆலாவின் புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தை இப் பூலோகத்தின்கண் விளக்கி நல்ல கீர்த்தியை நடாத்திய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தெய்வீகந் தங்கிய முன்னாற் கூறினார்கள்.