பக்கம் எண் :

சீறாப்புராணம்

748


முதற்பாகம்
 

2000. விழுந்து தெண்டனிட் டெழுந்திரு கரம்விரித் தேந்திப்

     பொழிந்த நீர்விழி தரவிரந் தேத்திய புகழான்

     மொழிந்து வல்வினை தொடுத்திடு முகம்மதின் வாய்மை

     யழிந்தென் சொற்பழு தறவர மருள்கவென் றறைந்தான்.

27

      (இ-ள்) அன்றியும், பூமியின் மீது விழுந்து சாஷ்டாங்கஞ் செய்து எழுந்து இரண்டு கைகளையும் விரித்து உயர்த்திக் கண்கள் சிந்தா நிற்கும் கண்ணீரைத் தரும் வண்ணம் இரந்து துதிக்கின்ற புகழினால் துதித்துக் கொடிய பாதகத்தையுண்டாக்கும் முகம்மதென்பவனின் வார்த்தைகளானவை கெட்டு எனது வார்த்தைகள் குற்றமறும்படி வரமருள்வாயாக வென்று கேட்டான்.

 

2001. மரைத்த டந்திகழ் திமஸ்கிறை வரவிடு நிதியந்

     தரைத்த லம்புகழ்ந் திடஅபூ சகல்தனக் கெனவே

     நுரைத்துத் தூங்கித ழொட்டைவாய் திறந்தெனை நோக்கி

     யுரைத்த ளித்திட வேண்டுமென் பதுமெடுத் துரைத்தான்.

28

      (இ-ள்) அன்றியும், அபூஜகிலென்பவன் தாமரைத் தடாகங்கள் பிரகாசியா நிற்கும் திமஸ்கு நகராதிபதியாகிய ஹபீபென்பவன் அனுப்பிய திரவியங்கள் தனக்கென்று இப்பூலோகமானது துதிக்கும் வண்ணம் நுரைக்கப் பெற்றுத் தூங்கிய இதழ்களையுடைய ஒட்டகங்கள் தமது வாய்களைத் திறந்து தன்னைப் பார்த்துச் சொல்லித் தன்பாலில் தரவேண்டுமென்பதையும் எடுத்துச் சொன்னான்.

 

2002. எதிரி னின்றுதன் றேவதை தனைப்புகழ்ந் தேத்திக்

     கதிர்கொள் பொன்முடிக் கோயிலின் வாயிலைக் கடந்த

     சதியன் றன்முக நோக்குத றவறெனச் சிவந்து

     கொதிகொ தித்தழன் றருக்கன்மேற் கடலிடைக் குதித்தான்.

29

      (இ-ள்) அவ்வாறு முன்னர் நின்று தனது தேவதையாகிய புத்துகானைத் துதித்து ஏத்திப் பிரகாசத்தைப் பெற்ற பொன்னினாலான சிகரத்தினது அக்கோயிலின் வாயிலைத் தாண்டி வெளியில் வந்த சதியையுடையவனாகிய அவ்வபூஜகிலென்பவனின் முகத்தைப் பார்ப்பது குற்றமென்று சொல்லிச் சூரியனானவன் மிகவும் கொதித்துக் கனன்று சிவப்புற்று மேல்பாற் சமுத்திரத்திற் போய்ப் பாய்ந்தான்.

 

2003. அற்றை நாளகன் றிடமறு தினத்தபூ சகல்தன்

     சுற்ற மோடடைந் தான்றுணைத் தோழர்க ளோடும்

     வெற்றி நன்னெறி முகம்மதும் விரைவினி லேகிக்

     கொற்ற மன்வர விடுத்தவ ரிடத்தினிற் கூண்டார்.

30