முதற்பாகம்
153. சந்தனந் திமிர்ந்து
திரண்டமற் புயத்தான்
தயிறகு தருதிரு மதலைக்
கந்தெறி தறுகட் கரடமா லியானைக்
காவலர்க் கசனிநா கூறு
சுந்தர வதனத் திலங்கிட விருந்து
சொரிமழைச் செழுங்கைநா கூறு
மைந்தன்மிக் குவம்த னிடத்துறைந்
திருந்து
மாட்சிபெற் றிலங்கிய தன்றே.
55
(இ-ள்)
சந்தனக் குழம்பைப் பூசப் பெற்றுத் திரட்சியுற்ற
வலிமையைக் கொண்ட தோள்களை யுடையவரான அந்த
தயிறகென்பவர் இவ்வுலகத்தின்கண் தந்த தெய்வீகந்
தங்கிய புதல்வர் கட்டுத் தறியை வீசாநிற்கும்
அஞ்சாமையினது மதங்களையுடைய பெரிய யானைகளின்
அரசர்களுக்கு இடியேற்றைப் போலும் நாகூ றென்பவரின்
அழகிய முகத்தினிடத்து அவ்வொளிவானது தங்கியிருந்து
பொழிகின்ற மேகத்தை நிகர்த்த செழிய கைகளையுடைய
அந்த நாகூறென்பவரின் புத்திரர்
மிக்குவமென்பவரிடத்தில் தங்கியிருந்து பெருமை
பெற்றுப் பிரகாசித்தது.
154. மிக்குவ மெனும்பே ரரசுதன் மதலை
வெயில்விடு மணிமுடி யுதது
பக்கலி லிருந்து செல்வமுஞ் செருக்கும்
பண்புறப் பெருக்கிட நிறைத்துத்
திக்கனைத் தினும்பேர் விளங்கிட
விளங்கித்
திறல்பெறு முததுநன் மதலை
தக்கமெய்ப் புகழ்சே ரிருநிதி யதுனான்
றன்னிடத் திருந்தெழி றழைத்த.
56
(இ-ள்) மிக்குவமென்று கூறும்
அபிதானத்தை யுடைய மன்னவரின் மைந்தர் பிரகாசத்தை
விடாநிற்கும் இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற
கீரிடத்தை யுடைய உததென்பவரினிடத்தில்
அவ்வொளிவானது தங்கியிருந்து செல்வத்தையும்
செருக்கையும் தகுதியுறும்படி அதிகப்படப் பூரணமாக்கித்
திசைக ளெல்லாவற்றிலும் கீர்த்தியானது விளங்கும்
வண்ணம் விளக்கமுற்று வலிமைபெற்ற அந்த உததென்பவரின்
நல்ல புத்திரர் தகுதியாகிய நன்மையைக் கொண்ட
கீர்த்தி பொருந்திய பெரிய திரவியத்தை யுடைய
அதுனானென் பவரிடத்திலிருந்து அழகோங்கப் பெற்றது.
155. வெண்ணிலா விரிக்கு
மொருதனிக் குடைக்கீழ்
வேந்துசெய் தருள்புரி
யதுனான்
|