பக்கம் எண் :

சீறாப்புராணம்

76


முதற்பாகம்
 

          கண்ணின்மா மணியா யுதித்திடு முஅத்து

               கவின்பெற விருந்தவ னிடத்தி

          லெண்ணிலா வரச ரடிபணிந் திறைஞ்ச

               வியற்றிய பேரொளி முஅத்து

          புண்ணியப் பொருளா யுருவெடுத் துலகம்

               புரந்தநி சாறிடத் துறைந்த.

57

     (இ-ள்) வெள்ளிய பிரகாசத்தைப் பரப்பாநிற்கும் ஒப்பற்ற ஒற்றைச் சந்திர வட்டக் குடையினது கீழிலுறைந்து அரசு செய்து கிருபை புரிந்த அந்த அதுனா னென்பவரின் கண்களினது மகத்தான மணியாக இவ்வுலகத்தின்கண் தோற்றமாகிய முஅத்தென்பவரிடத்தில் அழகு பெறும்படி தங்கியிருந்து அவர்பால் கணக்கற்ற காவலர்கள் பாதங்களில் தாழ்ந்து வணங்கச் செய்த அந்தப் பெரிய ஒளிவானது அந்த முஅத் தென்பவரின் புண்ணியத்தினது பொருளாகச் சொரூபத்தை யெடுக்கப் பெற்ற இப்பூமியை ஆண்ட நிசாறென்பவரிடத்தில் தங்கியது.

 

     156. ஒருகுடை நிழற்கீ ழிருநிலம் புரந்திட்

             டுருமென மும்முர சதிரத்

         திருநிறை நான்கு திக்கினுஞ் செங்கோல்

             செலுத்திய நிசாறெனு மரசன்

         பெருகிய நிலைமைக் குலக்கட னாப்பண்

              பிறந்தெழுங் கதிரவ னொப்ப

         வருமுகின் முலறு நபியிடத் துறைந்து

              மகிதலம் புகழ்ந்திட விருந்த.

58

     (இ-ள்) ஒப்பற்ற சந்திர வட்டக் குடையின் கீழ் பெரிய இந்தப் பூமியை அரசாட்சி செய்து இடியைப் போலும் வீர முரசம், கொடை முரசம், மணமுரசமென்னும் மூன்றும் முழங்கும் வண்ணம் செல்வமானது நிறையப் பெற்ற நான்கு திக்கிலும் செங்கோல் செலுத்திய அந்த நிசாறென்று கூறும் மன்னவரின் அதிகரித்த நிலைமை யுடைய குலமாகிய சமுத்திரத்தினது மத்தியில் தோற்றமாய் எழாநிற்கும் சூரியனை நிகர்க்க வத்த மேகமாகிய நபி முலறு அலைகிஸ்ஸலா மவர்களிடத்தில் அவ்வொளிவானது தங்கி இப்பூலோகம் துதிக்கும்படி இருந்தது.

 

     157. அறிவெனுங் கடலாய் வரம்புபெற் றிருந்த

              வருமறை முலறுநன் னபிக்குப்

         பெறுபல னெனவந் துதித்தயில் யாசு

              நபியெனப் பேரொளி தங்கித்

         துறவலர்க் கரசா யிருந்தஇல் யாசு

              புத்திரன் பவுத்தெலா நிறைந்த