முதற்பாகம்
மறுமன்னர் குலக்கோ
ளரியெனப் பிறந்த
மாமணி முதுறக்கத்
தெனுமால்.
59
(இ-ள்) அறிவென்னுஞ் சமுத்திரமாய்
ஒழுங்கு பெற்றுறைந்த அருமையான வேதத்தை யுடைய நன்மை
பொருந்திய அந்த நபி முலறு அலைகிஸ்ஸலாமவர்களுக்குப்
பெறாநிற்கும் பிரயோசனத்தைப் போலும் வந்து
இவ்வுலகத்தின்கண் தோற்றமாகிய புதல்வர் நபி இல்யாசு
அலைகிஸ்ஸலா மவர்களென்று சொல்லப் பெரிய ஒளிவானது
தங்கித் துறவலர்களுக் கதிபராக இருந்த அந்நபி இல்யாசு
அலைகிஸ்ஸலா மவர்களின் புதல்வர் எல்லாப் பவுத்துகளும்
பூரணப்பட்ட அன்னிய அரசர்களான யானைக் கூட்டத்திற்கு
ஆண் சிங்கத்தைப் போன்று அவதரித்த பெருமை பொருந்திய
இரத்தினமாகிய முதுறக்கத் தென்று கூறும் மேகமானவர்.
158. முகம்மது நயினா ரொளியிருந்
திலங்கு
மன்னவன் முதுறக்கா மதலை
செகமகிழ் குசைமா வயினுறைந் தரசர்
செழுமுடி நடுமணி யெனலாய்
நகுகதிர் விரிவெண் குடைநிழ லிருந்த
நரபதி யெனுங்குசை மாமன்
புகழெனத் தோன்றி வருதுரை கனானாப்
பூபதி யிடத்தின்வந் திருந்த.
60
(இ-ள்) நயினாராகிய நமது நாயகம் நபி
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி
வசல்லமவர்களின் பெரிய ஒளிவானது அவ்வாறு இருந்து
பிரகாசியா நிற்கும் இராஜராகிய அந்த முதுறக்
கென்பவருக்கான புதல்வர் இவ்வுலகமானது களிப்படைகின்ற
குசைமா வென்பவரினிடத்தில் தங்கி இராஜர்களின் செழிய
மகுடத்தினது மத்தியிற் பதித்த இரத்தினத்திற்
கொம்பாகி விளங்குகின்ற கிரணங்களைப் பரப்பிய
வெள்ளிய சந்திர வட்டக் குடையினது நிழலில் வைகிய
மனுடாதிபதியென்னும் அந்தக் குசைமா வென்பவரின்
பெருமைதங்கிய கீர்த்தியென்ன இப்பூமியில் உதயமாய்
வந்த துரையான கனானா வென்னும் அரசரினிடத்தில் வந்து
தங்கியது.
159. மடங்கலே றனைய தனபதி கனானா
மகிபதி தவத்துறு மதலை
நுடங்கிடை மடவார் கருத்தினைக் கவரு
நுலறெனு மழகுறு மரசன்
றடம்புயங் களின்மா நிலங்குடி யிருப்பத்
தயங்கியங் கவன்பெறு மரசன்
|