பக்கம் எண் :

சீறாப்புராணம்

78


முதற்பாகம்
   

          முடங்குளைப் பகுவாய் மடங்கலங் கொடியான்

               மோலிமா லிக்குசார் பிருந்த.

61

     (இ-ள்) ஆண் சிங்கத்தை நிகர்த்த குபேரராகிய அந்தக் கனானாவென்னு மரசரின் தவத்திற் பொருந்திய புத்திரர் ஒசியா நிற்கும் இடையையுடைய மாதர்களின் எண்ணத்தைக் கவருகின்ற நுலறென்று கூறும் அழகுற்ற இராஜரின் பெரிய தோள்களில் மகத்தாகிய இப்பூமியானது குடியாக இருக்கும் வண்ணம் விளங்கி அந்த முலறென்பவர் பெற்ற மன்னவர் நெருங்கிய புற மயிரின் அழகிய சிங்கக் கொடியை யுடையவரான கீரிடத்தைத் தரிக்கப் பெற்ற மாலிக் கென்பவரினிடத்திலிருந்தது.

 

     160. திண்டிற லரசர் சிரம்பொடி படுத்திச்

              சிவந்தவாட் கரத்தன்மா லிக்கு

         மண்டலம் விளக்கு முழுமணி விளக்காய்

              வந்தமன் பிஃறிடத் திலங்கி

         யெண்டிசை யிடத்து மெழுகடற் புறத்து

              மறுவகைத் தானைகொண் டெதிர்ந்து

         கொண்டமர் கடந்த வரசெனப் பெயருங்

              கொடுத்தது திருநபி யொளியே.

62

     (இ-ள்) தெய்வீகந் தங்கிய நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின் ஒளிவானது திண்ணிய வல்லமையையுடைய அரசர்களின் தலையைப் பொடியாகச் செய்து சிவப்புற்ற வாளாயுதத்தைத் தாங்கிய கையை யுடையவரான அந்த மாலிக் கென்பவருக்கு இப்பூலோகத்தை விளங்கச் செய்யும் முழுமையாகிய இரத்தின தீபமாய் வந்த மன்னவர் பிஃறென்பவரிடத்திற் பிரகாசித்து எட்டுத் திக்கின் கண்ணும் ஏழு சமுத்திரங்களின் பக்கத்திலும் ஆறு வகையான சேனைகளைக் கொண்டு எதிர்த்துக் கொண்டு யுத்தத்தை ஜெயித்த இராஜரென்று அபிதானத்தையும் கொடுத்தது.     

 

     161. குரிசிலென் றுயர்ந்த பிஃறெனு மரசன்

              குறைசியங் குலத்துறு மதலை

         விரிதிரை யுவரி நடுநிலம் புரந்த

              வேந்தன்கா லிபுவயி னிலங்கிக்

         கரிபரி பதாதி ரதம்புடை நெருங்குங்

              கடைத்தலை காலிபு தருசேய்

         முருகவிழ் மரவத் தொடைப்புயன் லுவையு

              முகமலர் தரவிருந் தொளிரும்.

63

     (இ-ள்) பெருமையிற் சிறந்தோ ரென்றோங்கிய அந்தப் பிஃறென்று கூறும் மன்னவருக்கு அழகிய குறைஷிக் குலத்திற்