முதற்பாகம்
பொருந்திய புதல்வர்
விரிந்த அலைகளையுடைய இப்பூமியை ஆண்ட அரசரான காலி
பென்பவரிடத்திற் பிரகாசித்து யானை, குதிரை, இரதம்,
காலாளாகிய நான்குவகை சேனைகளும் செறியும் முதல்
வாயிலையுடைய காலிபென்பவர் இவ்வுலகத்தில் தந்த
மைந்தரான மதுவைக் கொண்ட மலர்ந்த குங்குமப்
புஷ்பத்தினது மாலையைத் தாங்கிய தோள்களை யுடையவராகிய
லுவையு வென்பவரின் முகமானது விரியும்படி இருந்து
அவ்வொளியானது பிரகாசித்தது.
162. வான்மதி பகுந்த முகம்மது
நயினார்
வடிவுறும் பேரொளி லுவையாங்
கோன்மகன் ககுபு தன்னிடத் திலங்கிக்
குன்றினி லிடும்விளக் காக்கிச்
சூன்முதிர் மழைக்கைக் ககுபுகண்
மணியாய்த்
தோன்றிய முறத்திடத் துறைந்த
சேனமுங் கொடியுந் தொடர்கதிர் வடிவேற்
செம்மலென் றுயர்ச்சிபெற் றிருந்தான்.
64
(இ-ள்) வானத்தின் கண்ணுள்ள சந்திரனை
இரு பிளவாகப் பகுத்த நயினாரான நமது நாயகம்
எம்மறைக்குந் தாயகம் நபி ஹபீபு றப்பில் ஆலமீன்
காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்லமவர்களின் அழகைப் பொருந்திய பெரிய
அவ்வொளிவானது லுவையாகிய அரசரின் புதல்வர்
கஃபென்பவரிடத்திற் பிரகாசித்து அவரை மலையின்
மீதிட்ட தீபமாகச் செய்து சூலானது முதிரப் பெற்ற
மேகத்தைப் போலும் கைகளையுடைய அந்த கஃபென்பவரின்
கண்களினது மணியாக இவ்வுலகத்தினிடத்து உதயமான
முறத்தென்பவரிடத்தில் தங்கிற்று. அவர் பருந்துகளும்
காகங்களும் பின்பற்றுகின்ற கிரணங்களையுடைய
கூர்மையுற்ற வேலாயுதத்தினது வேந்தரென்று மேன்மை
பெற்றிருந்தார்.
163. கொந்தலர்ந் திருண்ட
கருங்குழன் மடவார்
கொங்கையிற் றடம்புய
மழுந்துஞ்
சுந்தரன் முறத்து மதலையாய் நிலத்திற்
றோன்றிய மதிமுகக் கிலாபு
மந்தர மனைய தடம்புய னிடத்தில்
வந்திருந் தவன்றிரு மதலை
கந்தடர் தறுகட் கரடமா லியானைக்
காவலன் குசையிடத் துறைந்த.
65
(இ-ள்) பெரிய தோள்களானவை
பூங்கொத்துக்களைக் கொண்ட விரிவுற்றிருண்ட கரிய
கூந்தலையுடைய மாதர்களின்
|