முதற்பாகம்
முலைகளில் அழுந்தா
நிற்கும் அழகை உடையவரான அந்த முறத்தென்பவரின்
புத்திரராய் இப்பூமியின்கண் உதயமாகிய சந்திரன்
போலும் வதனத்தையுடைய கிலாபென்பவரான மலைகளை
நிகர்த்த விசாலமாகிய புஜங்களை யுடையவரிடத்தில்
அவ்வொளியானது வந்து இருந்து அந்தக் கிலாபென்பவர்
உலகத்தில் தந்த மைந்தர் கட்டுத் தறியை அடருகின்ற
அஞ்சாமையினது மதங்களைச் சிந்தும் பெரிய யானைகளையுடைய
மன்னவரான குசை யென்பவரிடத்தில் தங்கியது.
164. வில்லுமிழ் வயிரத்
தொடைபுரண் டசைந்த
விறற்புயன் குசைதரு மதலை
செல்லென விரங்குஞ் சினந்துவே றாங்கும்
செழுங்கரன் அப்துல் முனாபு
மல்லலைத் திணிதோ ளரசர்நா யகன்றன்
வயினுறைந் தவன்பெறு மதலை
யெல்லவ னெனவே கலியிரு டுரத்தி
யிருந்தா சீமிடத் துறைந்த.
66
(இ-ள்) பிரகாசத்தைக் கொப்பளியா
நிற்கும் வயிர மணியினாலான மாலைகள் புரண்டு அசையப்
பெற்ற வலிமையைக் கொண்ட தோள்களையுடைய அந்தக்
குசையென்பவர் இவ்வுலகத்தின் கண் தந்த புதல்வர்
மேகத்தைப் போல இரங்குவதும், கோபித்து வேலாயுதத்தைத்
தாங்கக் கூடியதுமான செழிய கையையுடைய அப்துல்முனா
பென்பவராகிய சத்துராதிகளின் வல்லமையை அலையச்
செய்யுகின்ற திண்ணிய புயங்களையுடைய
மன்னராதிபரிடத்தில் அவ்வொளிவானது தங்கி அந்த
அப்துல் முனா பென்பவர் பெற்ற மைந்தர் சூரியனைப்
போலுந் தாரித்திர மாகிய அந்த காரத்தை யோடச் செய்து
இருந்த ஹாஷீ மென்பவரிடத்தில் தங்கியது.
165. கிம்புரிக் கோட்டுக் கடமலை
துளைத்துக்
கிளைத்திடும் வேற்கர
னாசீ
மம்புவிக் கரசாய்ப் பெற்றெடுத் துவந்த
வருமணி யப்துல்முத் தலிபு
நம்பிய தவப்பே றெனவிருந் திலங்கி
நறைகமழ் அப்துல்முத் தலிபு
தம்பெயர் விளக்கக் குவலையத் துதித்த
சந்ததி யப்துல்லா வென்போர்.
67
|