பக்கம் எண் :

சீறாப்புராணம்

81


முதற்பாகம்
 

(இ-ள்) பூண் கட்டிய கொம்புகளையுடைய யானைகளாகிய மலைகளைத் துளைத்து ஓங்காநிற்கும் வேலாயுதத்தைத் தாங்கிய கையையுடையவரான அந்த ஹாஷீ மென்பவர் அழகிய இந்தப் பூலோகத்திற்கு மன்னவராய்ப் பெற்றெடுத்து விரும்பிய அருமையான இரத்தினமாகிய அப்துல் முத்தலிபென்பவர் நம்பிடும் தவத்தினது பேற்றைப்போல இருந்து பிரகாசித்து வாசனை பரிமளிக்கப் பெற்ற அவ்வப்துல் முத்தலிபின் கீர்த்தியை விளக்கும்படி இப்பூலோகத்தின் கண் தோற்றிய புதல்வரான அப்துல்லா வென்பவர்.