முதற்பாகம்
(இ-ள்) அன்றியும், நயினா ராகிய
நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் நல்ல நயத்தைப் பெற்ற தங்களின்
சினேகிதர்மார்கள் தங்களை வளைந்து வரும் வண்ணம்
அழகிய கரும்பினது இரசத்தை யொத்த தீனுல்
இஸ்லாமென்னும் மார்க்க நிலைமையை நிலையாக நிற்கச்
செய்த இராஜாதி ராஜரான ஹபீபென்பவர் அனுப்பிய
பொன்னையும் இரத்தினங்களையும் செழிய கீர்த்தியானது
ஓங்கும்படி தங்களின் மாளிகையினிடத்துக் கொண்டு
போய்ச் செறித்து வைத்தார்கள்.
2014. மல்ல லம்புவி
யிடத்தினில் தீனெறி வழுவா
தில்ல றத்தொடு முதிர்மறை யவரிர வலர்க
ளல்ல லற்றிடப் பெருநிதி யெடுத்தினி தருளிப்
பல்ல ரும்புகழ் தரநபி யிருந்தனர் பரிவின்.
41
(இ-ள்) அவ்வாறு வைத்த நமது நாயகம்
செய்யிதுனா ஹபீபுறப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வளமையையும் அழகையும்
கொண்ட இவ்வுலகத்தின்கண் தீனுல் இஸ்லாமென்னும்
மார்க்க நெறியானது பிழையாது இல்லறத்துடன் முதிர்ந்த
வேதியர்களுக்கும் யாசகர்களுக்கும் துன்பமறும்படி இனிமை
யோடும் பெரிய திரவியங்களை எடுத்துக் கொடுத்தும்
பலரும் புகழும் வண்ணம் அன்புற் றிருந்தார்கள்.
|