பக்கம் எண் :

சீறாப்புராணம்

757


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்விதம் எண்ணிய வலிமை பொருந்திய தோள்களை யுடையவனான அபூஜகி லென்பவன் பிரகாசத்தைக் கொப்பளியா நிற்கும் சிவந்த இரத்தின மாலைகளும் திரட்சியுற்ற வெள்ளிய முத்துக்களும் இளந்தளிர்களும் நிகராகாத பல பொற்றுகில்களும் சொல்லுதற் கருமையான வாகனச் சுமையாகவும், ஒட்டகச் சுமையாகவும், தனது கைமுத்திரை யோடும் வைத்தான்.

 

2028. ஓதிக் கேட்டறிந் தொழுகிமுக் காலமு முணர்ந்த

     மூத றிஞரி லிருவரை யழைத்துமுன் னிருத்தி

     யாத ரத்தொடு சேர்த்தநல் வரிசையு மளித்துக்

     கோத றத்தெளிந் தெழுதுபத் திரத்தையுங் கொடுத்தான்.

14

      (இ-ள்) அவ்வாறு வைத்த அவன் படித்துக் காதுகளினாற் கேள்வியுற்று உணர்ந்து அதன் பிரகாரம் நடந்து செல்காலம், நிகழ்காலம், வருங்காலம் மென்னும் மூன்று காலங்களையும் தெரிந்த முற்றிய அறிவை யுடையோர்களில் இருவரை விளித்துத் தனது முன்னால் இருக்கும்படி செய்து அன்போடும் தான் சேகரப்படுத்திய நல்ல வரிசைகளையும் அவர்கள்பால் கொடுத்துக் குற்றமறும்படி தெளிந்து எழுதிய நிருபத்தையும் கொடுத்தான்.

 

2029. கொடுத்து நன்மொழி கொடுத்துந சாசிய்யாங் கோவுக்

     கடுத்து நின்றளித் திடும்வரி சைகளிவை யவன்சொற்

     படுத்தி டாமதி மந்திரர்க் கிவையெனப் பகுத்து

     விடுத்த னன்பெரு வஞ்சமும் படிறும்வி டாதான்.

15

      (இ-ள்) பெரிய வஞ்சகத்தையும் பொய்யையும் தன்னை விட்டும் விடாதவனான அவ்வபூஜகி லென்பவன் அவ்வாறு அவர்கள்பால் கொடுத்து நல்ல வார்த்தைகளைக் கூறி இவைகள் நஜாசிய்யா மென்னும் அரசனுக்குச் சமீபித்து நின்று கொடுத்திடும் வரிசைகள். அவ்வரசனது வார்த்தைகளைப் படுத்திடாத அறிவைக் கொண்ட மந்திரிமார்களுக்கு இவையென்று பாகித்து அனுப்பினான்.

 

2030. அறும னத்தின னபூசகல் கொடுத்தவை யனைத்து

     மெறுழின் மிக்குய ரொட்டக மீதினி லேற்றித்

     தறுகி லாதெழுந் திருவரு மரிதினிற் சார்ந்தார்

     நறவு யிர்த்ததண் டலைதிக ழபசிநன் நாட்டில்.

16

      (இ-ள்) அற்றுப் போகின்ற மனத்தை யுடையவனான அவ்வபூஜகி லென்பவன் அவ்வாறு கொடுத்தவைக ளெல்லாவற்றையும் பலத்தினது மிக வளர்ந்த ஒட்டகங்களின் மீது ஏற்றிக் கொண்டு அவர்களிருவரும் தாமதியா தெழும்பி அரிதில்