முதற்பாகம்
(இ-ள்) அந்த முகம்ம தென்பவனின்
வார்த்தைகளுக்கு வழிப்பட்டு நடக்கப் பட்டவர்களாகிய
அவனிலும் கொடுமையையுடையவர்கள் ஓங்கா நிற்கும்
அவ்விடத்தில் வந்து சேர்ந்தார்கள். மகத்தான ஹபஷி
நகரத்தைப் பங்க மாக்குவதற்கு முன்னர் அவர்களைத்
தண்டனை செய்து எங்கே யிருந்தாலும் இருக்கவொட்டாது
அவ்விடத்தை விட்டும் அகற்றி விடு மென்றும்.
2035. இன்ன வாசக மனைத்தினுங்
கேட்டவ ரெவருந்
துன்ன லார்கொலோ சிட்டரோ வெனச்சிரந் தூக்கிப்
பன்னு வாரதின் மந்திரர் பகைத்தவா சகத்தாற்
சொன்ன வாற்றினின் முடிப்பது துணிவெனத் துணிந்தார்.
21
(இ-ள்) இப்படிப்பட்ட வாசகங்க
ளெல்லாவற்றையும் அந்த நஜாசிய் யென்னும் மன்னவன்
காதுகளினாற் கேள்வியுற்று அவர்களியாவரும்
சத்துராதிகளா? நல்லவர்களா? என்று தலையையுயர்த்திக்
கேட்டான். அதில் மந்திரி மார்கள் கலகித்த
வாசகத்தினால் கூறிய விதத்தில் முடிப்பது துணிவென்று
சொல்லித் துணிந்தார்கள்.
2036. அரசர் நாயக னபசிந சாசியா
மரசன்
பரி்ச னத்தவர் மொழியினும் மறிவினும் பார்த்தே
யுரைச மர்ப்பக முகம்மதின் வழியினுக் குரிய
வரிசை செய்திவ ணிருத்தலே கடனென வகுத்தான்.
22
(இ-ள்) அவ்விதம் துணியவே இராஜ
நாயகனான ஹபஷி நகரத்தினது நஜாசியா மென்னும் மன்னவன்
தனது பரிசனர்களின் வார்த்தைகளினாலும் அறிவினாலும்
பார்த்துக் கூறா நிற்கும் கொடையையுடைய முகம்ம
தென்பவரின் மார்க்கத்திற் குரிய வரிசைகளைப் புரிந்து
இவ்விடத்தில் தங்கி இருப்பதுவே கடமையென்று வகுத்துச்
சொன்னான்.
2037. மலைம
னத்தபூ சகுலனுப் பியவெகு மானத்
தலைவ ரைத்தன திரும்பதி யிடையினிற் சாராக்
குலனு டனுமர் பதிக்கடைந் திடுமெனக் குறித்து
விலகி யங்கவர் கொணர்ந்தபல் பொருளையும் வெறுத்தான்.
23
(இ-ள்) அன்றியும், மலைவினைக் கொண்ட
மனத்தை யுடைய அவ் வபூஜகி லென்பவன் அனுப்பிய வரிசைத்
தலைவரைத் தனது பெரிய நகரமாகிய ஹபஷி நாட்டி னிடத்திற்
பொருந்தாது கூட்டத்தோடும் உமது ஊருக்குப் போய்ச்
சேருமென்று குறித்துச் சொல்லி விட்டு நீங்கி
அவ்விடத்தில்
|