முதற்பாகம்
(இ-ள்) எனது ஜீவனைப் போலும்
பிரியாத என் கூட்டமும் ஆண்மானும் குட்டியும் நெருங்கும்
வண்ணம் ஒன்று சேர்ந்து பசிய புற்களையுடைய
துறைகள்தோறும் மேய்ந்து பிரதி தினமும் ஓங்கா நிற்கும்
பசிகளைப் போக்கி ஓர் துட்ட மிருகங்களுக்காயினும்
ஆவியைப் பறி கொடாமல் மனசின் கண்ணுள்ள அச்சங்களை
யொழித்துப் பொருந்திய மலையினது சார்பில்
வாழ்ந்திருந்தோம்.
2070. இருநிலத் தாசைக் காயோ
ரிளங்கன்றென் வயிற்று றாதான்
மருவிய கலையு நானும் வருத்தமுற் றிருக்குங் காலம்
பெருகுதீன் முகம்ம தேநும் பெயரினைப் போற்றல் செய்தே
னுருவமைந் திளஞ்சூன் முற்றி யுதரமும் வளர்ந்த தன்றே.
19
(இ-ள்) பெரிய இப்பூலோகத்தினது
ஆசைக்காய் ஓர் இளங்கன்றானது எனது வயிற்றின்கண்
கெற்பமாகப் பொருந்தாததினால் கலந்த எனது ஆண்மானும்
நானும் துன்பமடைந்திருக்கின்ற காலத்தில் பெருகா
நிற்கும் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தையுடைய
நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களே!
உங்களின் திருநாமத்தைத் துதி செய்தேன். உடனே எனது
வயிற்றில் கருத்தங்கி இளம் பருவத்தைக் கொண்ட சூலானது
முற்றி வயிறும் வளர்தலுற்றது.
2071. தனியனென் னுயிருங்
காக்குங் கலையுயிர் தானு மொன்றா
யினிதினொன் றாய தென்ன விளங்கன்றொன் றீன்றே
னின்ப
நனிகளி கடலி லாழ்ந்து நறுமலை யிடத்திற் சேர்ந்து
துனிபல வகற்றி னேன்முன் சூழ்வினை யறிகி லேனே.
20
(இ-ள்) ஏகனாகிய எனது ஜீவனும்
என்னைக் காக்கா நிற்கும் கலையினது ஜீவனும் ஒருங்கு
சேர்ந்து இனிமையுடன் ஓர் ஜீவனானதைப் போல நான் ஒரு
இளங்கன்றைப் பெற்றேன். அதனால் இன்பமிகுத்த சந்தோஷ
சாகரத்தி லமிழ்ந்து வாசனை தங்கிய மலையினிடத்துச்
சேர்ந்து பல துன்பங்களையும் ஒழித்தேன். ஆதியில்
சூழ்ந்திருக்கும் செயலை இன்னதென்று அறிந்தேனில்லன்.
2072. உள்ளுயி ரனைய கன்று
மொருத்தலு மியானு மோர்நாள்
வெள்ளமொத் தனைய மானி னினமுமோர் வெற்பின் சார்பி
னள்ளிலை யள்ளி வாய்க்கொண் டரும்பசி தடிந்து நீருண்
டெள்ளள வெனினு மச்ச மின்றிநின் றுலவு நேரம்.
21
(இ-ள்) ஓர் நாள் எனது
சரீரத்தினகம் பொருந்தி யிருக்கும் ஜீவனையொத்த
குட்டியும் ஆண்மானும் நானும் சமுத்திரத்தை நிகர்த்த
மான் கூட்டங்களும் ஓர் மலையினது சார்பில் வாயினால்
நெருங்கிய இலைகளைக் கவ்வி யெடுத்து அரிய பசியைக்
|