பக்கம் எண் :

சீறாப்புராணம்

776


முதற்பாகம்
 

2085. ஒல்லையி னோடி நீங்கா தொருத்தலின் றளவு மோந்து

     புல்லினைக் கறியா நீரும் புசித்திடா திருந்து தேடி

     யல்லலுற் றழுங்கிக் கண்ணி னருவிநீர் சொரிய வாடிப்

     பல்லவ மெரியிற் புக்க தெனவுடல் பதைக்கு மன்றே.

34

      (இ-ள்) அன்றியும், அவ்வாறு அம்மானானது இன்று முழுவதும் விரைவிலோடிப் பிரியாமலும் புற்களை மணத்திப் பற்களினாற் கறியாமலும் தண்ணீருங் குடியாமலும் தங்கியிருந்து என்னைத் தேடித் துன்பமுற்று அழுது கண்களின் அருவியாகிய நீரானது சிந்தும் வண்ணம் மெலிந்து நெருப்பினகம் விழுந்த தளிரைப் போலும் சரீரமானது பதையா நிற்கும்.

 

2086. பிடிபடு மிதற்கு முன்னே மூன்றுநாட் பிறந்து புல்லின்

     கொடிநுனை மேய்ந்து நீருங் குடித்தறி யாது பாவி

     மடிமுலை யிரங்கிப் பாலும் வழிந்தது குழவி சோர்ந்து

     படிமிசை கிடந்தென் பாடு படுவதோ வறிகி லேனே.

35

      (இ-ள்) அன்றியும், மட்டுக் கட்டா நிற்கும் இதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பிறந்து புல்லினது கொடியான நுனியைச் சாப்பிட்டுத் தண்ணீரும் அருந்தத் தெரியாத கன்றானது வாட்டமுற்றுப் பூமியின் மீது கிடந்து என்ன துன்பப் படுகின்றதோ? பாவி யாகிய யான் அறிகிலேன். எனது மடிப்பைக் கொண்ட முலைகளானவை இறங்கிப் பாலும் வழிகின்றது.

 

2087. கோட்டுடைக் கலையி னோடுங் கூடிற்றோ வலதோர் பாலின்

     மீட்டதோ வினத்தைச் சேர்ந்து விம்மிநின் றேங்கிற் றோகான்

     காட்டிடைப் புலிவாய்ப் பட்டுக் கழிந்ததோ வென்னைத் தேடி

     வாட்டமுற் றலறி யோடி மறுகிற்றோ வறிகி லேனே.

36

      (இ-ள்) அன்றியும், கொம்புகளையுடைய ஆண்மானோடும் சேர்ந்ததோ! அல்லது ஓரிடத்தில் திரும்பினதோ? தனது கூட்டத்தைப் பொருந்தி நின்று விம்மி அழுததோ? ஆற்றைக் கொண்ட காட்டினிடத்துப் புலியின் வாயி லகப்பட்டுக் கழிந்து போயிற்றோ? என்னைத் தேடி மெலிவடைந்து சத்தித்து ஓடி மறுகுகின்றதோ? ஒன்றும் அறியேன்.

  

2088. தேங்கிய பசியால் வாடித் திரிந்ததோ விறந்த தோவென்

     றேங்கிய வருத்த மல்லா லிவ்விட ரதனி லாவி

     நீங்குமென் றுள்ளத் துள்ளே னெட்டுட லுடும்பி னாவி

     தாங்கிய தரும வேந்தே தவறன்று சரத மன்றே.

37

      (இ-ள்) அன்றியும், நிறைந்த பசியினால் மெலிந்து திரிந்ததோ? செத்ததோ? என் றேங்கப் பெற்ற துன்பமே யல்லாமல் இந்த வேட்டுவன் வலையி லகப்பட்ட துன்பத்தினால் நமது ஜீவ