பக்கம் எண் :

சீறாப்புராணம்

783


முதற்பாகம்
 

2106. இணைத்தென்னைப் பிணித்த வேட னிதயத்துக் கியையப் பேசி

     பிணைத்தன்னைப் பொருத்தி நின்றோர் பெரியவன் றூத ரிந்தத்

     திணைத்தலத் தறிவி லாத சேதனச் சாதி யன்றே

     யணைத்துயி ரனைத்துங் காத்தற் கவரல தில்லை யன்றே.

55

      (இ-ள்) அவ்வாறு கூற என்னைச் சேர்த்துக் கட்டிய அந்த வேட்டுவனது மனசுக்குப் பொருந்தும் வண்ணம் வார்த்தைகளை யாடித் தங்களைப் பிணையாகப் பொருந்தச் செய்து நின்றவர்கள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்த லென்னும் ஐந்திணைகளையுடைய இந்தப் பூலோகத்தின்கண் அறிவில்லாத உணர்ச்சியைக் கொண்ட சாதியானவரல்லர். யாவற்றிற்கும் பெரியவனான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் றசூலாகிய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் ஜீவராசிக ளெல்லாவற்றையும் அணைத்துக் காப்பதற்கு அவர்களல்லாமல் வேறே யொருவரு மில்லர். 

 

2107. என்னுயி ரதனை வேட னிரும்பசிக் கியைய வீந்து

     நந்நபி பிணையை மீட்ப நன்மனம் பொருந்தி லேனாற்

     பொன்னுல கிழந்து தீயு நரகினிற் புகுவ தல்லாற்

     பின்னொரு கதியு முண்டோ பிழையன்றிப் பெருமை யன்றே.

56

      (இ-ள்) அன்றியும், எனது ஜீவனை அந்த வேட்டுவனது பெரிய பசிக்காகப் பொருந்தும்படி கொடுத்து நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பிணையை மீட்பதற்கு நன்மையைக் கொண்ட மனமானது பொருந்தாமலிருப்பேனானால் சொர்க்க லோகத்தையு மிழந்து தீயா நிற்கும் நரகலோகத்திற் போய்ச் சேர்வ தல்லாமற் பின்னே ஒரு பேறுமுளதா? இல்லை! பிழையே யல்லாது பெருமையு மல்ல.

 

2108. சிறப்புடைக் குரிசின் முன்னஞ் செப்பிய மாற்ற மாறி

     மறப்பொடு மிருந்தே னாகில் வரிப்புலி யினத்தின் வாய்ப்பட்

     டிறப்பதே சரத மல்லா லிருப்பதற் கிடமற் றுண்டோ

     வுறப்பெரும் விருப்ப மென்மே லிருத்தலை யொழித்தல் வேண்டும்.

57

      (இ-ள்) அன்றியும், சிறப்பை யுடைய குரிசிலான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் முன்னர் கூறிய வார்த்தைகளை மாறி மறதியுடன் இருந்து விட்டேனேயானால் இரேகைகளைக் கொண்ட புலியினது இனத்தின் வாயிலகப்பட்டு இறந்து போவதே சத்தியம் அல்லாது