முதற்பாகம்
விட்டுத்
தேறுகின்ற மனசினது பிரகாசத்தோடும் குட்டியோடும்
பொருந்தி ஆண்மானிடத்திற் சென்று சேர்ந்து நடப்பதை
முயல்வாயாக வென்று கூறினான்.
2121. வானவர் பரவுங் கோமான்
முகம்மது மானை நோக்கிக்
கானகஞ் சென்னீ யென்றார் கமலமென் பதத்திற் றாழ்ந்து
தீனிலைக் குரிய வேடன் றன்னையுந் திருந்தப் போற்றி
நானிலம் புகலப் பாரி னடந்தினஞ் சேர்ந்த தன்றே.
70
(இ-ள்) தேவர்களாகிய
மலாயிக்கத்து மார்கள் வணங்கா நிற்கும் கோமானாகிய
நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களும் அந்த மானைப் பார்த்து நீ
காட்டினிடத்துச் செல்லுவாயாக வென்று சொன்னார்கள்.
உடனே அவர்களின் தாமரை மலரை யொத்த மெல்லிய
பாநங்களிற் பணிந்து தீனுல் இஸ்லா மென்னும்
மார்க்கத்திற் குரிய வேட்டுவனையும் செவ்வையாய்த்
துதித்து நெய்தல், மருதம், குறிஞ்சி, முல்லை யென்னும்
நான்கு நிலங்களையு முடைய இவ் வுலகமானது வாழ்த்தும்
வண்ணம் பூமியின்கண் நடந்து தனது இனத்தைப் போய்ச்
சேர்ந்தது.
2122. தேனைக்குங் குமங்கள் சிந்தச்
செழித்ததிண் புயத்து வள்ளல்
கானைக்குவ் விடத்திற் காட்டுங் கமலமென் பதத்தைப்
போற்றித்
தானைக்கும் பதிக்கு மியானே தலைவனென் பவர்போல்
வேடன்
மானைக்கொண் டுவரப் போயீ மானைக்கொண் டகத்திற்
புக்கான்.
71
(இ-ள்) குங்குமப் புஷ்பங்களினா லான
மாலைகள் நறவத்தைச் சொரியும்படி செழிப் புற்ற
திண்ணிய தோள்களை யுடைய வள்ளலாகிய நமது நாயகம்
நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களது பூமியி னிடத்திற் பரிமளத்தைக் காட்டா
நிற்கும் தாமரை மலரைப் போன்ற மெல்லிய சரணங்களைத்
துதித்து நான் சேனைகளுக்கும் இவ்வுலகத்திற்கும்
தலைமைத்தனத்தை யுடையவ னென்று சொல்பவரைப் போலும்
அவ் வேட்டுவன் அந்த மானைக் கொண்டு வரப் போய்
ஈமானைக் கொண்டு தனது வீட்டின்கண் போய்ச்
சேர்ந்தான்.
2123. துடவைநன் மலரைத் தூற்றுந்
தூய்நிழ லிடத்தை நீந்திப்
படர்முகிற் கவிகை யோங்கப் பாருள தெவையும் வாழ்த்த
வடவரை யனைய திண்டோள் வயவர்க ளினிது சூழக்
கடிமனை யிடத்திற் புக்கார் கபீபிற சூலு மன்றே.
72
|