முதற்பாகம்
(இ-ள்) அன்றியும், ஹபீபென்னுங்
காரணப் பெயரை யுடைய நமது நாயகம் எம் மறைக்குந் தாயகம்
காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களும் சோலைகளானவை நல்ல
புஷ்பங்களைச் சொரியா நிற்கும் பரிசுத்தமான
நிழலையுடைய அவ்விடத்தை விட்டுந் தாண்டி விரிந்த
மேகக் குடையானது ஓங்கவும், பூமியின் கண்ணுள்ள யாவும்
துதிக்கவும், மகாமேருப் பருவதத்தை நிகர்த்த திண்ணிய
புயங்களை யுடைய வீரர்க ளாகிய சகாபாக்கள் இனிமையுடன்
சூழ்ந்து வரவும், காவலைக் கொண்ட தங்கள்
மாளிகையின்கண் வந்து நுழைந்தார்கள்.
|