பக்கம் எண் :

சீறாப்புராணம்

790


முதற்பாகம்
   

ஈத்தங்குலை வரவழைத்த படலம்

 

கலிவிருத்தம்

 

2124. சுருதியின் முறைவழித் துணைவர் சூழ்தரக்

     கருமுகி னிழலொடுங் கருணை பொங்கிட

     மருவுமெண் டிசைக்குமான் மதங் கமழ்ந்திட

     விருநிலம் புகழ்நபி யிருக்கும் போதினில்.

1

      (இ-ள்) பெரிய இந்தப் பூலோகமானது துதியா நிற்கும் நபியாகிய நமது நாயகம் எம் மறைக்குந் தாயகம் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது முறைமையான மார்க்கத் துணைவர்க ளாகிய சஹாபாக்கள் சூழவும், கரிய நிறத்தைக் கொண்ட மேகக் குடையினது நிழலுடன் காருண்ணியம் அதிகரிக்கவும், கஸ்தூரி வாசனை யானது பொருந்திய எட்டுத் திக்குகளிலும் கமழவும், இருக்குங்காலத்தில்.

 

2125. காலினிற் கபுசுமோர் கையிற் குந்தமு

     மேலிடுஞ் சட்டையும் விசித்த கச்சையுந்

     தோலொரு தோளினுந் தூக்கி வந்தவ

     னாலநந் நபிதமை யடுத்து நோக்கினான்.

2

      (இ-ள்) பாதங்களில் கபு சென்று கூறா நிற்கும் பாதரட்சையும் ஒரு கையின்கண் ஜட்டியும், சரீரத்தின்கண் இட்டிரா நின்ற அங்கியும், அரையின்கண் கட்டிய கச்சையும், ஒரு தோளின்கண் பரிசையும் தூக்கிக் கொண்டு வந்தவனான ஓர் அறபி, ஆல நபியாகிய நமது நாயகம் ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைச் சமீபித்துப் பார்த்தான்.

 

2126. தரியலர்க் கன்புறுஞ் சார்பி னான்மறைக்

     குருநெறி முகம்மதைக் குறித்தெ திர்ந்துநீ

     ரிருநிலத் தெவரென வியம்பி னான்பர

     ருரநெரிந் திடச்செவி யுளுக்குஞ் சொல்லினால்.

3

      (இ-ள்) அவ்விதம் பார்த்தப் பகைவர்களின் மார்பானது நெரியும் வண்ணம் காதுகள் உளுத்துப் போகின்ற வார்த்தையினால் அந்த அறபிச் சத்துராதிகளுக்கு அன்பு பொருந்தும் சார்பினால் புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தை யுடைய குருமார்க்கத்தைக் கொண்ட நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு