பக்கம் எண் :

சீறாப்புராணம்

791


முதற்பாகம்
 

அலைகிவசல்ல மவர்களைக் குறிப்பிட்டு எதிர்ந்து பெரிய இந்தப் பூமியின்கண் நீவிர் யாவரென்று வினவினான்.

 

2127. அச்சமொன் றின்றிநின் றறபி கூறலும்

     வச்சிரப் புயமுகம் மதுதம் வாய்திறந்

     திச்சகம் புகழ்தனி யிறைவன் றூதியா

     னிச்சய மிதுவென நிகழ்த்தி னாரரோ.

4

      (இ-ள்) அந்த அறபி யானவன் அவ்வாறு ஒரு பயமு மில்லாமல் நின்று வினாவுதலும், வச்சிரத்தை நிகர்த்த தோள்களை யுடைய நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் வாயைத் திறந்து நான் இந்த உலக மானது துதியா நிற்கும் ஒப்பற்ற இறைவனான ஜல்லஜலாலகு வத்த ஆலாவின் தூதாகிய றசூல் இஃது உண்மை யென்று கூறினார்கள்.

 

2128. ஆதிதன் றூதென வறிவ தற்கரும்

     பூதலத் தென்மனம் பொருந்தி யன்பொடுஞ்

     சாதமுற் றிடப்பெருஞ் சாட்சி யாமெனுங்

     கோதறு குறிப்பெவை கூறுவீ ரென்றான்.

5

      (இ-ள்) அவ்விதம் கூறவே அதற்கு அறபி நீவிர் யாவற்றிற்கும் முதன்மையனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் தூதாகிய றசூலென்று உணர்வதற்கு அருமையான இந்தப் பூமியின்கண் எனது இருதயமானது சம்மதித்து அன்புடன் உண்மையைப் பொருந்தும் வண்ணம் பெரிய சாட்சியா மென்னுங் குற்றமற்ற குறிப்பு யாவை? அவற்றைக் கூறுவீராகவென்று கேட்டான்.

 

2129. காரணக் கரியுனக் கியையக் காண்கிலென்

     னாரணத் துறுங்கலி மாவை யன்பொடும்

     பூரண மனத்தொடும் புகல்வை யோவெனச்

     சீர்தரு மமுதவாய் திறந்து செப்பினார்.

6

      (இ-ள்) அவன் அவ்விதம் கேட்க உனக்குக் காரணத்தைக் கொண்ட சாட்சியைப் பொருந்தும்படி பார்த்தால் எனது புறுக்கானுல் அலீமென்னும் வேதத்திற் சார்ந்த கலிமாவை அன்போடும் நிறைவாகிய மனதோடும் கூறுவாயா? என்று தங்களின் சிறப்பைப் பெற்ற அமுத வாயைத் திறந்து கேட்டார்கள்.

 

2130. அவனியி லெவர்க்குநன் கறிய வென்மனக்

     கவரறக் காரணக் கரியுண் டாமெனி

     னபியுமை யலதிலை யென்ன நண்பொடும்

     பவமற நும்வழிப் படுவ னியானென்றான்.

7