பக்கம் எண் :

சீறாப்புராணம்

792


முதற்பாகம்
 

      (இ-ள்) இந்தப் பூலோகத்தின்கண் யாவர்களும் நன்கு அறியவும் எனது இருதயத்தின் கவரறவும் காரணத்தைக் கொண்ட சாட்சியா உண்டுமே யானால் உம்மை யல்லாது வேறே நபி யில்லையென்று நண்போடும் எனது பாவங்களானவை அற்றுப் போகும்படி நான் உமது மார்க்கத்தி லுட்படுவேனென்று கூறினான்.

 

2131. நிலத்தினில் விண்ணினீ டிசைக்கு ணின்மன

     நலத்தது கரியெவை நாட்டு வாயெனக்

     குலத்துறு முகம்மது கூறக் கேட்டுநற்

     சிலைத்தழும் பிருந்ததோ ளறபி செப்புவான்.

8

      (இ-ள்) நற்குலத்திற் பொருந்திய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இப்பூலோகத்திலும் வானலோகத்திலும் நீட்சியுற்ற எண்டிசைகளுக்குள்ளும் உனது இருதயத்திற்கு நன்மையை யுடையதான சாட்சியானது யாவை? அவற்றை எடுத்து இங்கு நாட்டிக் கூறுவாயாக வென்று சொல்ல, நல்ல வில்லினது தழும்பானது இருக்கப் பெற்ற தோள்களையுடைய அறபி தனது காதுகளினாற் கேள்வியுற்றுக் கூறுவான்.

 

2132. இருவருக் கெதிர்தர நின்ற வீந்ததின்

     விரிதலைக் குலைமலர் வீழ்ந்தி டாதிவண்

     வரவழைத் திடுவிரேன் மனமும் வாக்குமொத்

     தருமறை மொழிவழி யாவ னியானென்றான்.

9

      (இ-ள்) நம்மிருவருக்கும் எதிராக நிற்கப் பெற்ற விரிந்த தலையையுடைய இந்த ஈத்தமரத்தின் ஈத்தங்குலையைப் புஷ்பங்கள் கீழே விழாமல் இவ்விடத்திற்கு வரும்படி செய்வீரேயானால் நான் மனமும் வாக்கு மொத்து அருமையான உமது புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது வார்த்தைகளின் வழியிலாகிப் போவேனென்று கூறினான்.

 

2133. ஈந்தினை நோக்கிநின் றிறைவன் றூதுவர்

     வாய்ந்தநின் குலையிவண் வருக வேண்டுமென்

     றாய்ந்தநன் மறைதெரி யமுத நன்கனி

     யேய்ந்தவாக் கினைத்திறந் தியம்பி னாரரோ.

10

      (இ-ள்) இறைவனான ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் தூதுவராகிய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அந்த ஈத்தமரத்தைப் பார்த்து நின்று கொண்டு சிறந்த உனது குலையானது இவ்விடத்திற்கு வரவேண்டுமென்று ஆராயப் பெற்ற நன்மை தங்கிய