பக்கம் எண் :

சீறாப்புராணம்

793


முதற்பாகம்
 

வேதங்களைத் தெரிந்த அமுதத்தையும் நல்ல கனியையும் நிகர்த்த வாக்கையுடைய வாயைத் திறந்து கூறினார்கள்.

 

2134. ஆதிதன் றூதுவ ரறையக் கேட்டலுஞ்

     சோதிவெண் குருத்தொடுந் தோன்ற மேலெழுந்

     தேதினுஞ் சிதைகிலா திழிந்து மாநில

     மீதினில் விரிதலை விளங்கி நின்றதே.

11

      (இ-ள்) யாவற்றிற்கும் முதன்மையனான ஜல்ல ஷகுனகுவத்த ஆலாவின் தூதுவராகிய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு கூறக் கேட்ட மாத்திரத்தில் அந்த ஈத்தமரமானது பிரகாசத்தைக் கொண்ட வெள்ளிய குருத்தோடும் விளங்கும் வண்ணம் மேலோங்கி யாதிலும் சிதைவடையாது இறங்கி மகத்தாகிய இந்தப் பூமியின் மீதில் விரிந்த தலையானது விளக்கமுற்று நின்றது.

 

2135. விரிதலைத் தருவடி நின்ற மென்குலைப்

     பரிவொடும் பயப்பயக் குதித்துப் பாரிடை

     யிருவிழி தெரிபவ ரெவர்க்கு மின்புறத்

     திருமுகம் மதுமுனஞ் சிறந்து நின்றதே.

12

      (இ-ள்) அன்றியும், விரிந்த தலையையுடைய அந்த வீத்த மரத்தின் உச்சியில் நிற்கப் பெற்ற மெல்லிய ஈத்தங்குலையானது அன்போடும் மெல்ல மெல்லச் சாடி வந்து இந்தப் பூமியின்கண் இரண்டு கண்களும் தெரிவோர்களாகிய யாவர்களும் இன்பமடையும்படி தெய்வீகந் தங்கிய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் முன்னர் சிறப்புற்று நின்றது.

 

2136. அந்தர விரிதலைக் கமைந்த பூங்குலை

     யிந்தமா நிலத்திடை யிறங்கி யிவ்வுழை

     வந்ததிற் புதுமையு மறுத்துண் டோவெனச்

     சிந்தையுற் றறபிநந் நபியைச் சிந்தித்தான்.

13

      (இ-ள்) அப்பொழுது அந்த அறபி யானவன் ஆகாயத்தினிடத்து விரிந்த சிரத்தைக் கொண்ட ஈத்த மரத்தில் அமைந்த புஸ்பங்களையுடைய அழகிய குலையானது மகத்தாகிய இந்தப் பூமியின் கண்ணிறங்கி இவ்விடத்தில் வந்ததைப் பார்க்கிலும் ஆச்சரியமானது வேறே யுளதா? இல்லையென்று தனது மனதின் கண் பொருந்தி நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை நினைத்தான்.