பக்கம் எண் :

சீறாப்புராணம்

818


முதற்பாகம்
 

2198. உரப்பி யாங்கரித் தபூசகு லுரைத்திடு முரையிற்

     பரப்பு நன்கதிர் முகம்மது பகர்ந்தது தெரியா

     திரைப்பெ ருங்கட லெனவினஞ் சூழ்தர விறந்தார்

     மரைப்ப தத்தபித் தாலிபென் றழகுறும் வள்ளல்.

7

      (இ-ள்) தாமரை மலர் போலும் பாதங்களை யுடைய அபீத்தாலி பென்று அழகு பொருந்தா நிற்கும் வள்ள லானவர் அபூஜகி லென்பவன் அங்கே சத்தமிட்டு மூர்க்கங்காட்டிக் கூறிடும் வார்த்தைகளினால் நல்ல கிரணங்களை விரியச் செய்யும் நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கூறியது தெரியாமல் ஒலிக்குகின்ற பெரிய சமுத்திரத்தைப் போல பந்துக்களானவர் வளையும் வண்ணம் உயிர் துறந்தார்.

 

2199. வட்ட வாருதிப் புவியிடை முகம்மது தமக்குப்

     பட்ட மென்பவந் திறங்கிய வருடம்பத் ததின்மே

     லெட்டு மாதமும் பதினொரு நாளுஞ்சென் றிதற்பின்

     சட்ட கந்தனை விட்டுயிர் பரிந்தவண் சார்ந்தார்.

8

      (இ-ள்) வட்ட மாகிய சமுத்திரத்தைக் கொண்ட பூமியின்கண் நாயகம் நபிகட் பெருமானார் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு நபிப்பட்டமென்பது வந்திறங்கிய வருட மானது பத்தின் மேல் எட்டு மாதங்களும் பதினொரு நாட்களும் கழிந்து இதற்பின் அவ்வபீத்தாலிபென்பவர் உடலை விட்டும் உயிரானது நீங்கி வானலோகத்தைப் போய்ச் சேர்ந்தார்.

 

2200. மறந்த யங்குவேற் கரஅபித் தாலிபு மன்ன

     ரிறந்த காலையிற் கடலுடைந் தெனநக ரிரங்கச்

     சிறந்த மாதர்மை விழிமழை பொழிதரச் செருமி

     யறங்கி டந்தநெஞ் சவரொடு மழுதிரங் கினரால்.

9

      (இ-ள்) கொலைத் தொழிலானது பிரகாசியா நிற்கும் வேலாயுதத்தைத் தாங்கிய கையையுடைய அபீத்தாலி பென்னுமரசர் உயிர் துறந்த காலத்தில் சமுத்திர மானது உடைத்தாற் போல அந்தத் திருமக்கமா நகரத்தி லுள்ளவர்கள் அழவும், சிறப்புற்ற பெண்களினது மையெழுதப் பெற்ற கண்களானவை மழை போலும் நீரைச் சிந்தவும், புண்ணிய மானது கிடக்கப் பெற்ற மனத்தையுடையவர்களுடன் நெருங்கி அழுது இரங்கினார்கள்.

 

2201. வரிசை நந்நபி முகம்மது வயிறலைத் திரங்கப்

     பரிச னத்தவ ரடங்கலும் பதைபதைத் தேங்க

     வரச ரியாவரும் வந்தடுத் தெடுத்துநீ ராட்டிச்

     சரகி னேர்வழி யடக்கினர் முடித்தனர் சடங்கு.

10