பக்கம் எண் :

சீறாப்புராணம்

831


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், அருந்தா நிற்கும் பொருந்திய அமுதத்தை நிகர்த்த கலிமாவினது வார்த்தைகளுக் கமையாது இருந்த ஊர்கள் யாவை? உங்களை விரோதித்தவர்கள் யாவர்? உங்களின் மனமானது பொருந்தாத திசையானது எந்தத் திசை? சூரியனது பிரகாசமும் மொப்பாகாத திருமேனியை வருந்தல் செய்தவர்கள் யாவர்? எனக்குத் தெரியும்படி கூறுங்கள்.

 

2237. செப்பி னீரெனிற் செறுநர்க டிரளுமத் திசையு

     முப்பு வாரியு ளமிழ்த்துவ னலதொரு வரையா

     லிப்பெ ரும்புவிக் குள்ளரைத் திடுகுவ னெளியேன்

     றுப்ப றிந்திட வேண்டுமென் றிரவொடுஞ் சொன்னார்.

30

      (இ-ள்) அவ்வாறு கூறுவீர்களேயானால் சத்துராதிகளின் கூட்டத்தையும் அந்தத் திசையையும் உப்பை யுடைய சமுத்திரத்தின்கண் அமிழும்படி செய்வேன். அல்லது ஒப்பற்ற மலையினால் இந்தப் பெரிய பூமியினகம் அரையும் வண்ணம் செய்வேன். எளியவனாகிய எனது சாமர்த்தியத்தை தாங்கள் உணர்ந்திட வேண்டுமென்று இரத்தலோடுங் கூறினார்.

 

2238. விண்டி னுக்கர சிவைபகர்ந் திடத்துளி விதிர்க்குங்

     கொண்ட லங்கவி கைக்கிறை யகங்களி கூர்ந்து

     மண்ட லத்தும துரைவழி நடத்திடின் மறைநேர்

     கண்டு தேறுவ ரெவர்பொறை நிலத்தினிற் கடனே.

31

      (இ-ள்) பருப்பதங்களுக்கு இராஜாவாகிய அந்த மலக்கானவர் இவைகளைக் கூறத் திவலைகளை விதிர்க்கா நிற்கும் அழகிய மேகக்குடையினது அரசரான நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மன மகிழ்ச்சி யடைந்து இந்தப் பூலோகத்தின்கண் உமது வார்த்தைகளின் ஒழுங்கில் நடத்தினால் புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது உண்மைகளைக் கண்டு தெளிவோர்கள் யாவர்? ஒருவருமில்லர்? ஆதலால் பொறுமையானது பூமியின்கண் கடமையாகும்.

 

2239. இறைய வனருட் படிக்கிட ரடைந்ததென் னிடத்திற்

     குறையி தென்றுமா நிலத்தவர் தமைக்குறைப் படுத்தன்

     மறையி னேரல வெகுளியை மனத்தினி லடக்கி

     நிறையி னிற்பது பெரியவர்க் குரியநன் னிலையே.

32

      (இ-ள்) அன்றியும், இறைவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் கிருபைப்படிக்கு என்னிடத்திற் றுன்பமானது வந்து சேர்ந்தது. இஃது குற்றமென்று மகத்தாகிய பூமியின் கண்ணுள்ள அவர்களைக் குற்றப்படுத்துவது வேதத்தினது ஒழுங்கல்ல கோபத்தை இருதயத்தின்கண் அடங்கும் வண்ணம் செய்து தைரியத்தில் நிற்பது பெரியோர்களுக்குச் சொந்தமான நல்ல நிலைமையாகும்.