முதற்பாகம்
(இ-ள்) அவ்வாறு ஒப்பற்ற நகுலா வென்னுந் தலத்தினது ஒரு பக்கத்தில் தரித்தலுடன் ஆசையோடு துஆவை
ஓதி இரக்கத் தங்களின் காதுகளினாற் கேள்வியுற்று மனமானது அதிகங் களிக்கப் பெற்றுப் பார்த்து
இவ்விடத்தில் தங்கி யிருப்பது நபி முகம்மதென்பவர். வாயிற் கொண்டு ஓதுவது புறுக்கானுல்
அலீமென்னும் வேதமென்று திரும்புதற் கரிதாக நின்று அந்த ஒன்பது ஜின்களும் தங்களின் சரீரங்க
ளானவை சிலிர்க்கப் பெற்றன.
2265.
இத்தினத் தினிலன் பாக வெழினபி கமல
பாத
முத்திபெற் றீமான் கொண்டு முதற்பவந் துடைப்போ மென்ன
வொத்தித மித்துத் தம்மி லொன்றுக்கொன் றுறுதி கூறிப்
பத்தியுள் ளிருத்தி நாட்டத் துடன்வெளிப் பட்ட வன்றே.
11
(இ-ள்) அவ்வாறு சிலிர்க்கப் பெற்ற ஜின்கள் இந்த நாளில் அன்பாக அழகிய நபியாகிய முகம்ம
தென்பவரின் தாமரை மலர் போலும் திருவடிகளின் மோட்சத்தை யடைந்து ஈமான் கொண்டு ஆதியிலுள்ள
பாவங்களை இல்லாமல் செய்வோ மென்று தம்மில் ஒன்றுக்கொன்று சம்மதித்து இணங்கி யுறுதி
சொல்லி மனசின்கண் விசுவாசத்தை இருக்கும்படி செய்து ஆசையோடும் வெளிப்பட்டன.
2266.
பனியொடு திமிர மூடப் படவரு மிரவின் கண்ணே
தனியிருந் தெழின்மெய்ச் சோதி தயங்கிய நபிமுன் பாக
வினியவர் போலச் சென்று வந்தவா றெடுத்துக் கூறிக்
கனியென நெகிழ்ந்த நெஞ்சிற் கருத்தையுங் கூற லுற்ற.
12
(இ-ள்) அவ்விதம் வெளிப்பட்ட அந்த ஜின்கள் பனியுடன் இருளானது மூடும் வண்ணம் வரா நிற்கும்
அந்த இராவினிடத்து ஏகமாயிருந்து அழகிய திருமேனியினது பிரகாசம் விளங்கப் பெற்ற நாயகம் நபி
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது முன்பாக மேன்மையை யுடையவர்கள் போலப்
போய்த் தாங்கள் வந்த வரலாற்றை எடுத்துச் சொல்லிக் கனியைப் போலும் நெகிழ்தலுற்றுத் தங்களின்
இருதயத்தின் கண்ணுள்ள சிந்தனையையும் கூறத் தொடங்கின.
2267.
பின்னணித் தாதி தூதர் பிறப்பரென் றாதி நூல்கள்
பன்னிய துளதின் றெங்கட் பார்வைகள் குளிரக் கண்டே
முன்னைநாட் பவங்க டீர்த்தே முகம்மதே யென்னப் போற்றிச்
சொன்னயக் கலிமா வோதிச் சுடர்ப்பதந் தொழுது போன.
13
(இ-ள்) முகம்ம தென்னுந் திருநாமத்தை யுடையவர்களே! யாவற்றிற்கும் முதன்மையனான அல்லாகு
சுபுகானகு வத்த ஆலாவின் றசூலானவர் பின்னர் சமீபமாய் இவ்வுலகத்தின்கண்
|