முதற்பாகம்
அவதரிப்பார்களென்று
வேதங்கள் கூறிய துண்டு. அதை இன்றைய தினம் எங்கள் கண்கள் குளிரும் வண்ணம் பார்த்தோம்.
முந்திய நாள்களிலுள்ள பாவங்களை யொழித்தோம் என்று சொல்லித் துதித்துச் சொல்லினது
நயத்தைக் கொண்ட ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர் றசூ லுல்லாஹிழு யென்னுங் கலிமாவைக் கூறிப்
பிரகாசந் தங்கிய அவர்களின் திருவடிகளை வணங்கித் தங்களின் இருப்பிடத்திற்குச் சென்றன.
2268.
நன்கலி மாவை
யோதி நறுமனக் களிப்பி னோடுஞ்
சின்கடம்
மினத்தைச் சேர்ந்து சென்றது மறபு நாட்டின்
மின்கடந்
திலங்குஞ் சோதி விரிந்தமெய் முகம்ம தென்னுங்
கொன்கதிர்
வேலார்க் கீமான் கொண்டது முரைத்துக் கூறும்.
14
(இ-ள்)
நன்மை பொருந்திய கலிமாவை அவ்வாறு கூறி நறிய மனமகிழ்ச்சியோடும் ஜின்களின் கூட்டத்தைச்
சேர்ந்து அறபு நாட்டின்கண் போனதும், மின்னலை ஜெயித்து ஒளிரா நிற்கும் பிரகாசமானது விரியப்
பெற்ற திருமேனியையுடைய நாயகம் நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மென்னும் அச்சத்தைத்
தருகின்ற கிரணங்களைக் கொண்ட வேலாயுதத்தை யுடையவர்களுக்கு ஈமான் கொண்டதையும், சொல்லிப்
பின்னுஞ் சொல்லும்.
2269.
பூதலத் திடத்தின் மக்கா புரத்தினின் முகம்ம தென்போர்க்
காதித னருளாற்
றூதென் றருநபிப் பட்டம் வந்து
வேதமு மிறங்கித்
தின்பத் தீனெறி விளக்கஞ் செய்தார்
பேதம தன்று காணா
திருப்பதும் பிழைய தன்றே.
15
(இ-ள்)
இந்தப் பூமியின்கண் திருமக்கமா நகரத்தில் நாயகம் நபி முகம்மது றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களுக்கு யாவற்றிற்கும் முதன்மையனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவினது
கிருபையினால் றசூலென்று அருமையான நபிப்பட்டம் வந்து புறுக்கானுல் அலீமென்னும் வேதமு
மிறங்கிற்று. அவர்கள் இனிமையினது தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தை எவ்விடமும் விளக்கஞ்
செய்தார்கள். அஃது மாறுபாடான தல்ல, அவர்களைப் பாராதிருப்பதுங் குற்ற மானது.
2270.
வஞ்சக னிபுலீ
சென்போன் வார்த்தையு ளடங்கிப் பேதை
நெஞ்சின ராகித்
தீயோ ரெனநிலை நின்றோம் வேறொன்
றஞ்சலித்
தறியோம் நல்லோர்க் கவம்விளைத் தோமீ தெல்லாம்
நஞ்சுறை நரகம்
புக்கு நெறியலா னலனு முண்டோ.
16
|