பக்கம் எண் :

சீறாப்புராணம்

843


முதற்பாகம்

      (இ-ள்) அன்றியும் வஞ்சக னாகிய இபுலீ சென்பவனின் வார்த்தைகளை மனசின்கண் அடக்கஞ் செய்து மூடத்தனத்தைக் கொண்ட இருதயத்தை யுடையவர்களாகித் தீயர்க ளென்று சொல்லும்படியான நிலைமையில் நின்றோம். வேறே யொன்றை வணங்கி யறிய மாட்டோம் நல்ல ஜனங்களுக்கு வீணான கருமங்களைச் செய்தோம் இஃதனைத்தும் விஷமானது தங்கப் பெற்ற நரக லோகம் போய்ச் சேரும் மார்க்கமே யல்லாமல் இதிற் பிரயோசனமு முளதோ? இல்லை.

 

2271. நபிதிருப் பாதம் நண்ணி நன்னெறி முறைவ ழாதோர்

     புவியிடத் தினிது வாழ்ந்து பொன்னுல காள்வ ரென்றார்

     கவினுறும் பெரியோர் வேதங் காட்டிய நெறியு மீதே

     தவிர்கிலா தெழுக வென்னச் சாற்றின சின்க ளன்றே.

17

      (இ-ள்) அன்றியும், அந்த ஜின்கள் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தெய்வீகந் தங்கிய சரணங்களை யடைந்து நல்ல சன்மார்க்கத்தினது முறையில் நின்றும் வழுவாதவர்கள் இந்தப் பூமியின்கண் இனிமையுடன் வாழ்ந்து சுவர்க்க லோகத்தை யாள்வார்க ளென்று அழகு பொருந்திய பெரியோர்கள் கூறினார்கள். வேதங்கள் காட்டிய மார்க்கமு மிஃதே. ஆதலால் நீங்கள் தவிராது எழும்புங்க ளென்று கூறின.

 

2272. கூறிய மொழியைக் கேட்டுக் குழுவுட னிருந்த சின்க

     டேறிய கருத்து ளொத்துத் தேர்ந்தெழுந் தவிட நீந்திப்

     பேறுடை மக்க மென்னும் பெரும்பதி யடுத்தோர் சின்னை

     யீறிலான் றூதர்க் கன்பாய்த் தூதுவிட் டிருந்த வன்றே.

18

      (இ-ள்) அந்த ஜின்கள் அவ்வாறு கூறிய வார்த்தைகளைத் தங்கள் காதுகளினாற் கேள்வியுற்றுக் கூட்டத்தோடுமிருந்த ஜின்கள் தெளிந்த கருத்தினகம் சம்மதித்துத் தேர்ச்சியுற்றெழும்பி அந்த இடத்தைக் கடந்து மோட்சத்தை யுடைய திருமக்கமென்னும் பெரிய நகரத்தைச் சமீபித்து ஒரு ஜின்னை ஒரு காலத்தும் முடிவற்றவ னான ஜல்ல ஷகுனகு வத்த ஆலாவின் தூதுவ ராகிய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு அன்பாகத் தூதாய் அனுப்பி விட்டு அவ்விடத்தில் தானே இருந்தன.

 

2273. நறைகொளுஞ் செவ்வித் திண்டோ ணபிநகு லாவை நீந்தி

     யிறைவனே வலினால் வானோ ரெண்ணிலர் சூழச் செல்வங்

     குறைவறா மக்க மென்னுங் கொழுநக ரதனின் வந்தார்

     மறைபட விருந்து சின்கள் வரவிடுந் தூதும் வந்த.

19