பக்கம் எண் :

சீறாப்புராணம்

844


முதற்பாகம்
 

      (இ-ள்) பரிமளத்தைக் கொண்ட அழகிய திண்ணிய புயங்களை யுடைய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நகுலா வென்னும் அந்தத் தலத்தை விட்டும் கடந்து இறைவனாகிய அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் ஏவலினால் கணக்கற்றவர்க ளான மலாயிக்கத்துமார்கள் தங்களை வளையும் வண்ணம் வளமானது குறையாத திருமக்கமென்னும் செழிய ஊரின்கண் வந்து சேர்ந்தார்கள். ஜின்கள் மறைவாக இருந்து அனுப்பும் தூதும் வந்து சேர்ந்தது.

 

2274. வந்ததூ திருந்த செவ்வி மதிமுகம் மதுவைக் கண்டு

    கந்தமென் மலர்த்தாள் வீழ்ந்து கைகுவித் தெழுந்து போற்றிச்

    சிந்தையின் மகிழ்ந்தன் பாகச் சின்களால் விடுக்க வந்த

    சந்தியா னென்னச் சாற்றிப் பின்னருஞ் சாற்று மன்றே.

20

      (இ-ள்) அவ்வாறு வந்த தூதாகிய ஜின் னானது அங்கு தங்கியிருந்த அழகிய சந்திரனைப் போலும் நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைக் கண்களினாற் கண்டு வாசனையைக் கொண்ட மெல்லிய தாமரை மலரை நிகர்த்த பாதங்களில் விழுந்து இரண்டு கைகளையுங் கூப்பி எழுந்து துதித்து மனசினிடத்து களிப்படைந்து அன்பாக நான் ஜின்களினால் அனுப்பவந்த தூதுவ னென்று கூறிப் பின்னருங் கூறா நிற்கும்.

 

2275. எங்கடங் குலத்தி னுள்ளா ரெண்ணிலர் நகர்க்க ணித்தாய்

     மங்குலின் கவிகை யோய்நும் மலர்ப்பதங் கண்டு தீனி

     னிங்கிதத் தொடுமீ மான்கொண் டேகுதற் கிசைந்து நின்றா

     ரங்கெழுந் தருள வேண்டு மென்றினி தறைந்த தன்றே.

21

      (இ-ள்) மேகக் குடையை யுடைய முகம்ம தென்னுந் திருநாமத்தை யுடையவரே! எங்களின் கூட்டத்தி லுள்ளவர்களான கணக்கற்றவர்க ளாகிய ஜின்கள் இந்தத் திருமக்கமா நகரத்திற்குச் சமீபமாய் வந்து உங்கள் தாமரை மலர்போலு மிரு பாதங்களையும் பார்த்துத் தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தில் இனிமையுடன் ஈமான் கொண்டு போவதற்குப் பொருந்தி நின்றார்கள். தாங்கள் அவ்விடத்திற்கு எழுந்தருள வேண்டு மென்று இனிமையோடுங் கூறிற்று.

 

2276. சின்னிவை யுரைப்பக் கஞ்சச் செழுமுக மலர்ந்து வேதம்

     பன்னிய பிசுமி லோதிப் பண்புட னெழுந்து வள்ளல்

     பொன்னணி மாட வீதி நகர்ப்புறத் தடுத்துக் கூண்டு

     மன்னிய குழுவின் வந்தார் மாநிலந் தழைக்க வந்தார்.

22