பக்கம் எண் :

சீறாப்புராணம்

845


முதற்பாகம்
 

      (இ-ள்) மகத்தாகிய இந்தப் பூலோக மானது தழைக்கும் வண்ணம் வந்தவர்க ளான வள்ளல் நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அந்த ஜின்னானது இவைகளைக் கூற, தாமரை மலர்போலும் செழிய முகமானது மலர்ச்சி யுற்றுப் புறுக்கானுல் அலீமென்னும் வேதமானது உரைத்த ழுபிஸ்மில்லா ஹிர் றஹ்மா னிர்றஹீழு மென்று கூறிப் பண்போடு மெழும்பிப் பொன்னினாற் செய்த அழகிய மாடங்களைக் கொண்ட வீதிகளை யுடைய அந்தத் திரு மக்கமா நகரத்தினது புறத்தைச் சமீபித்து ஒருங்கு சேர்ந்து பொருந்திய கூட்ட மாகிய அஜ் ஜின்க ளிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.

 

2277. கருமுகி னிழற்றக் கஞ்சக் கதந்தரை படாது நானம்

     பொருவறக் கமழ வந்த புண்ணியப் பொருளைக் கண்டு

     திருமுகத் தெதிர்ந்து சின்க டிரளொடு மிறைஞ்சி வாழ்த்திப்

     பருவர லகற்றித் தேறச் சிலமொழி பகரு மன்றே.

23

      (இ-ள்) கரிய நிறத்தைக் கொண்ட மேகங்க ளானவை நிழலைச் செய்யவும், தாமரை மலர் போலும் பாதங்கள் பூமியிற் படாமல் கஸ்தூரி வாசனை ஒப்பறக் கமழவும், அவ்வாறு வந்த புண்ணியப் பொருளாகிய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை அந்த ஜின்கள் தங்களின் கண்களினாற் பார்த்துத் தெய்வீகந் தங்கிய முகத்தி லெதிர்ந்து கூட்டத்தோடுந் தொழுது புகழ்ந்து துன்பங்களை யொழித்துத் தெளியும்படி சில வார்த்தைகளைக் கூறி நிற்கும்.

 

2278. வானகத் தமரர் செய்ய மலரடி பரவி யேத்த

     நானிலத் தரிய வேத நபியெனும் பட்ட நும்பா

     லானதற் குரித்தா யெங்க ளகத்தினிற் களங்க மென்னு

     மூனமற் றிடவே றுண்மை யுறுதியொன் றறிய வேண்டும்.

24

      (இ-ள்) வான லோகத்தின் கண்ணுள்ள தேவர்களாகிய மலாயிக்கத்து மார்கள் தொழுது துதிக்கும் வண்ணம் முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருத மென்னும் நான்கு நிலங்களை யுடைய இந்தப் பூலோகத்தினிடத்து அருமையான புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது நபி யென்று கூறும் பட்டமானது உங்களிடத்தில் ஆனதற்கு உரியதாய் எங்களது மனசிற் களங்க மென்னும் குற்றம் அற்றுப் போக வேறே யுண்மை யாகிய ஓருறுதி யானது தெரிய வேண்டும்.