முதற்பாகம்
பெண்களுக்குத்
தலைமையானவர், அழகு முழுவதும் பொதியப்பட்ட பொன்னானியன்ற கொடியானவர்; நன்மை பொருந்திய
பெண்களது கற்பு முழுவதும் ஒன்றுசேர்ந்து வடிவெடுத்த கன்னியானவர்.
176.
அறத்தினுக் கில்லிட மருட்கோர் தாயகம்
பொறுத்திடும் பொறுமையிற் பூமிக் கெண்மடங்
குறைப்பெருங் குலத்தினுக் கொப்பி லாமணிச்
சிறப்பினுக் குவமையில் லாத செல்வியே.
11
(அன்றியும் தருமத்திற்
கிருப்பிடமானவர், கிருபைகளுக்குத் தனித்த தாய் வீடானவர், பொறுக்கத்தக்க பொறுமையிற்
பூமிக்கெட்டுப் பங்கதிகமானவர், தாம் தங்கியிருக்கும் பெருமை பொருந்திய குடும்பத்திற்கு
ஒப்பற்ற கண்மணியானவர், உவமை சொலற்கரிய சிறப்பினுக்கு இலக்குமியானவர்.
177. குணிப்பருங் குறைசியங் குலமென் றோங்கிய
மணிப்பெருங் கடலிடை வளருஞ் செல்வமே
தணிப்பிலா
தெடுத்தெறி தரங்க மேனடுப்
பணிப்படா
தெழுந்தசெம் பவளக் கொம்பனார்.
12
மதித்தற்கரிதாய்க் குறைஷிக்குல
மென்றோங்கா நிற்கும் முத்துக்களையுடைய பெரிய சமுத்திரத்தின்கண் வளர்கின்ற செல்வத்தைத்
தணிவின்றி யெடுத்துவீசும் அலைகளின் நடுவே தாழ்வடையாது முளைத்தெழுந்த செம்பவளக் கொம்பு
போன்றவர்.
178. இத்தகைக்
குலமயி லாமி னாவெனு
முத்தவெண்
ணகைக்கனி மொழியு மோகனச்
சித்திர
அப்துல்லா வென்னுஞ் செம்மலு
மொத்தினி
தமுதமுண் டுறையு நாளினில்.
13
மேலே கூறப்பட்டுள்ள இவ்விதத்
தகுதிகளையும் மயக்கத்தைத் தரும் பேரழகையுமுடைய அப்துல்லாவென்று சொல்லும் பெருமையிற்
சிறந்தவரும் முத்தைப் போலும் வெள்ளிய பற்களையும் கனியைப் போலும் இனிய சொற்களையுமுடைய
ஆமினாவென்று சொல்லும் வடிவிற் குலமயில் போன்றவரும் ஒரே மனத்தினராய்க் கலந்து இனிமையான
காமானுகூலத்தை யனுபவித்து வாழ்ந்திருக்கும் நாளினில்.
கலிநிலைத்துறை
179.
வீசு தெண்டிரைக்
கடன்மலை யடங்கவெண் குடைக்கீ
ழாசி லாதசிங்
காசனத் திருந்தசிக் கந்தர்
|