பக்கம் எண் :

சீறாப்புராணம்

857


முதற்பாகம்
 

2306. மருங்கினி லிருந்து பகர்ந்தகாம் மாதன்

          வார்த்தைகேட் டகத்தினிற் களித்துத்

     தருங்கதிர்த் தரள நகையிற்புன் முறுவ

          றரவரு விருத்தனை நோக்கி

     நெருங்கிட வறந்த காறடு மாற

          நெடிதுசஞ் சலத்தொடும் வருந்தி

     யிருங்கண மடுத்தென் னிடத்தினி லுறைந்த

          தென்னினை வெனவெடுத் திசைத்தார்.

9

      (இ-ள்) பக்கத்தி லுட்கார்ந்து அவ்வாறு கூறிய காம்மாவென்பவனின் வார்த்தைகளை நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் காதுகளினாற் கேள்வியுற்று மனசின்கண் மகிழ்ச்சி யடைந்து பிரகாசத்தைத் தரா நிற்கும் முத்தினது ஒளியைப் போல புன் சிரிப்பைத் தரும் வண்ணம் அங்கு வந்த அந்தக் கிழவனைப் பார்த்து நெருங்கும்படி மெலிந்த காற்களானவை தடுமாற்றமுற நீண்ட துக்கத்தோடும் துன்ப மடைந்து பெரிய இந்தக் கூட்டத்தைச் சமீபித்து என்னிடத்தில் வந்து தங்கிய கருத்து யாது? என்று எடுத்துக் கேட்டார்கள்.

 

2307. முன்னெடுங் காலத் திப்பெரும் புவன

          முழுதினு மொருகுடை நீழ

     றன்னிடைப் படுத்தி நால்வகைக் கதத்த

          தளத்தொடு மொருதனிக் கோலான்

     மன்னிய திசைகள் பொதுவறப் புரந்து

          மருவல ரிலையெனத் தடிந்திட்

     டென்னையொப் பவரிந் நிலத்தினி லிலையென்

          றிருந்தன னாளியா சனத்தில்.

10

      (இ-ள்) அவ்விதங் கேட்க அந்தக் காம்மா வென்னும் விருத்தன் ஆதியில் நெடுங்காலமாக இந்தப் பெரிய பூலோக முழுவதையும் ஒரு குடையினது நிழலின்கண் படுத்தி உக்கிரத்தைக் கொண்ட இரதம், கஜம், துரகம், பதாதி யென்னும் நான்கு வகைச் சேனைகளோடும் ஒப்பற்ற ஏகச் செங்கோலினால் பொருந்திய எண்டிசைகளையும் பொதுமையான தறும் வண்ணம் அரசாட்சி செய்து சத்துராதிகள் இல்லையென்று குறைத்து என்னை நிகராவார்கள் இப்பூலோகத்தின்கண் ஒருவருமில்லரென்று சிங்காசனத்தி லுட்கார்ந்திருந்தேன்.

 

2308. ஒருதனித் திகிரி செலுத்தியெந் நிலமு

          முள்ளடிப் படுத்திடு நாளிற்

     பொருவரு மதத்தாற் றவங்குண மிரக்கம்

          பொறைநிறை புண்ணியம் பிறவுந்