முதற்பாகம்
தெரிவரா திகழ்ந்து பவம்பழி தொடரச்
செய்வழி முறைமையிற் செய்தேன்
பெருகிய வலியுஞ் சீர்த்தியு முடையோய்ப்
பின்வருந் துன்பமொன் றறியேன்.
11
(இ-ள்) அன்றியும்
ஓங்கா நிற்கும் வலிமையையும் மிகுத்த கீர்த்தியையுமுடைய முகம்ம தென்னுந் திருநாமத்தைக் கொண்டவரே!
ஒப்பற்ற ஏகச் சக்கரத்தைச் செலுத்தி எத் தலங்களையும் எனது பாதத்தினகம் படுத்திய காலத்தில்
உவமையில்லாத மதத்தினால் தவம், குணம், கிருபை, பொறுமை, நிறை, தரும மாகிய மற்றவைகளுந் தெரியாமற்
பழித்து பாவமும், பழியும், பின்பற்றும் வண்ணம் செய்யும் மார்க்கத்தினது முறைமையில் செய்தேன்.
பின்னர் வரும் வருத்தங்கள் ஒன்றையு மறிந்திலன்.
2309.
தீ்வினைக் குரித்தாய் வருந்தொழி லனைத்துஞ்
செய்தர சிருக்குமந் நாளிற்
பாவியென் னுடலு மிதயமு நடுங்கப்
பார்த்தெனைக் கடிந்துவற் புறுத்திக்
கூவிமுன் னிருத்தித் தாட்பெரு விரல்க
ளிரண்டையுங் கூட்டுற நெருக்கி
நோவர விறுகக் கட்டிவைத் தெழுந்து
போயின னொருநொது மலனே.
12
(இ-ள்) பாதகத்திற்குச்
சொந்தமாய் வரா நிற்கும் செயல்களியாவையும் அவ்விதம் செய்து அரசிருக்கு மந்தக் காலத்தில்,
ஒரு நொய்மையை யுடைய மனிதன் பாவி யாகிய எனது சரீரமும் மனமும் நடுக்க மடைய என்னை நோக்கிக்
கோபித்து உறுதிப்படுத்திக் கூப்பிட்டு முன்னா லுட்காரச் செய்து பாதங்களினது பெருவிரல்க ளிரண்டையும்
சேரும் வண்ணம் நெருக்கித் துன்பம் வரும்படி இறுகக் கட்டி வைத்து எழும்பிப் போயினான்.
2310.
காலினிற் பிணித்த பிணிப்பினை வலிதிற்
கழற்றின னோக்கினன் கழலா
தோலிடுங் கடகக் கரத்தினா லவிழ்த்தே
னவிழ்ந்திடா தொருங்குநின் றவர்கள்
மேலுற வகிர்ந்துங் கருவியா லறுத்தும்
விரிந்தசெந் நெருப்பிடை கொடுத்து
நூலள வெனினு நெகிழ்ந்திலா வதனின்
வலியினை நுவலுதற் கரிதே.
13
|