பக்கம் எண் :

சீறாப்புராணம்

859


முதற்பாகம்
 

      (இ-ள்) அவன் போகவே காலிற் கட்டிய கட்டை வலிமையோடும் கழற்றிப் பார்த்தேன். கழந்திலது ஒலியா நிற்கும் கடகத்தைக் கொண்ட கைகளால் அவிழ்த்தேன். அவிந்திலது கூடி நின்றவர்கள் அக்கட்டின் மேல் பொருந்தும் வண்ணம் கருவிகளால் வகிர்ந்தும் அறுத்தும் விரிவுற்ற சிவந்த அக்கினியின்கண் கொடுத்தும் ஒரு நூலினது அளவாயினும் நெகிழ்ந்திலது அந்தக் கட்டின் பலத்தைக் கூறுவதற்கரிதாகும்.

 

2311. கட்டினான் மிகுதி வருத்தமுற் றொடுங்கிக்

          கலங்கினன் மலங்கின னெடுநாள்

     விட்டிடா திழைத்த பாவங்க டிரண்டு

          வெகுண்டொரு கயிற்றுரு வெடுக்கப்

     பட்டதோ வலதென் னூழ்விதிப் பயனோ

          படிபுரந் திடும்பெரும் பலனோ

     கிட்டிய தவத்தோர் முனிந்திடு முனிவோ

          வெனக் கிடந்தனன்மதி யிலியேன்.

14

      (இ-ள்) அன்றியும், அறிவற்றவனான யான் நீண்ட நாள் அந்தக்கட்டினால் அதிகத் துன்பமடைந்து ஒடுங்குதலுற்றுக் கலங்கினேன் மலந்திலேன் விடாது செய்த பாவங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து கோபித்து ஒரு கயிற்றினது சொரூபத்தை எடுக்கப் பட்டதோ? அல்லது எனது ஊழினது விதியின் பிரயோசனமோ? இப் பூமியை யரசாட்சி செய்த பெரிய பலனோ? தவத்தைக் கிடைக்கப் பெற்றோர்கள் சபித்திடும் சாபமோ? என்று சொல்லிக் கிடந்தேன்.

 

2312. அரசிழந் தெனது கிளையினிற் பெரியோ

          ரிடத்தினு மடுத்தன னவரா

     லொருதிருக் கெடுத்து நெகிழ்க்கவும் பயமுற்

          றொடுங்கினர் பெருவரை யிடத்துங்

     குரைகடலிடத்து மெண்டிசை புரக்குங்

          கொற்றவ ரிடத்தினு மடைந்தே

     னிருமென விருத்தி நோக்குவ ரலதென்

          னிடர்தவிர்த் திடுபவ ரிலையே.

15

      (இ-ள்) அன்றியும், எனது அரசாட்சியை யொழித்து என் குடும்பத்திலுள்ள பெரியோர்களிடத்துப் போய்ச் சேர்ந்தேன். அவர்கள் அந்தக் கயிற்றினது ஒற்றைத் திருக்கை எடுத்து நெகிழ்க்கவும் ஏலாமல் பயங்கரமடைந்து ஒடுங்கினார்கள். பெரிய மலைகளினிடத்தும் சத்தியா நிற்கும் சமுத்திரத்தினிடத்தும் எட்டுத் திக்குகளையும் ஆளா நிற்கும் அரசர்களிடத்தும் போய்ச் சேர்ந்தேன். அவர்கள் என்னை யுட்காருமென்று உட்காரச் செய்து பார்த்தார்களே யல்லாமல் எனது துன்பத்தை யொழித்தவர்க ளொருவருமில்லர்.