முதற்பாகம்
(இ-ள்) நன்மை
பொருந்திய நபியாகிய ஆதமென்பவர் இந்த வார்த்தைகளைக் கூறினாரென்று இருந்து துன்பமடைந்து அதன்
பின்னர் இந்தப் பூலோகத்தின்கண் நபிமாரென்று கூறும் அந்த அபிதானத்தைப் பெற்றிருந்தவர்கள்
இடந்தோறும் நடந்து சென்று அழகாகக் கூறினேன். அந்த அவர்களியாவரும் தெய்வீகந் தங்கிய நபியான
நாயகம் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மென்பவர்களினால் வவ்விய இந்தக் கட்டானது
விட்டு நீங்குமே யல்லாமல் யாவர் மறுத்துத் தவிப்பவர்களென்று கூறினார்கள்.
2316.
அன்னவ ருரைத்த மொழிமனத் தடக்கி
யிருந்தன னறிவெனுந் துணையா
லெந்நெடுங் காலத் தெப்புவி யிடத்தி
னினிதொடும் பிறப்பரென் றெண்ணிப்
பன்னெடுங் கால மிதுநினை வலது
வேறுரை பகர்ந்திருந் தறியேன்
மன்னிய புகழார் முகம்மது பிறந்தா
ரெனுமுரை மறைகள்சொற் றனவே.
19
(இ-ள்) அந்த
நபிமார்கள் அவ்வாறு கூறிய வார்த்தைகளை இருதயத்தின்கண் அமையும்படி செய்து இருந்து அறிவென்று
கூறும் துணையினால் நீட்சி தங்கிய எந்தக் காலத்தில் எத்தலத்தின்கண் இனிமையோடும் அவதரிப்பாரென்று
நினைத்து நீண்ட பலகாலம் இதுவே சிந்தனை யல்லாமல் வேறு வார்த்தைகளைக் கூறியிருந்தறிய மாட்டேன்.
வேதங்கள் பொருந்திய கீர்த்தியை யுடையவர்களான நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் அவதரித்தார்களென்னும் வசனத்தைச் சொல்லின.
2317.
புவியினி லறத்தின் மக்கமா புரத்திற்
பொதுவற வேதமு மிறங்கி
நபியெனுந் திருப்பட் டமுந்தரித் தரிய
நன்னிலைத் தீனெறி நடத்திக்
குவிகுபி ரகற்றி யிருந்தன ரென்னக்
கோதிலா மனமகிழ் வுடனே
யிவணில்வந் தடைந்தே னினிவினைப் பவங்க
ளியாவையு மெளிதின்வென் றனனே.
20
(இ-ள்) அன்றியும்,
இப் பூலோத்தின்கண் ஹறமென்னும் கஃபத்துல்லாவை யுடைய திருமக்கமா நகரத்தில் பொதுமையான தறும்படி
புறுக்கானுல் அலீமென்னும் வேதமும் இறங்கித் தெய்வீகந் தங்கிய நபியென்னும் பட்டமுந் தரிக்கப்
பெற்று
|