முதற்பாகம்
(இ-ள்)
காலினது கட்டானது அவ்வாறு நீங்க அந்தக் காம்மாவென்பவன் தனது பயங்கரத்தை யொழித்து அரசராகிய
இந்நாயகம் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை வணங்கித்
துதித்து நின்று அமிர்தமென்று கூறா நிற்கும் ழுலாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர் றசூலுல்லாஹிழு யென்னுங்
கலிமாவை ஓதி நல்ல சன்மார்க்கத்தில் நுழைந்து தேற்றுகின்ற நன்மை பொருந்திய புறுக்கானுல்
அலீமென்னும் வேதத்தினது முதியோர்களை ஏத்தி அழகையுடையவர்களான அலி றலி யல்லாகு அன்கு அவர்களின்
திருவடிகளைப் புகழ்ந்து மாற்றுதற்கரிய வேடத்தையும் விட்டு நீங்கி அறிவில் வல்லவ னென்று
சொல்லும் வண்ணம் ஒப்பற நின்றான்.
2327.
சீதவொண் கதிர்செய் முகம்மதி னடியிற்
சென்னிவைத் தடிக்கடி புகழ்ந்து
கோதற வெழுந்து தீனவ ரெவர்க்குங்
குறைவறச் சலாமெடுத் துரைத்துக்
காதலின் தீன்தீன் விளங்கவென் றேத்திக்
கடிமலர்ச் சோலையு நீந்தி
மாதவம் பெருகு மனத்தினன் காம்மா
மன்னுதன் றிசையினிற் போனான்.
30
(இ-ள்) அவ்வாறு
நின்ற மகத்தாகிய தவமானது ஓங்கா நிற்கு முள்ளத்தை யுடையவனான காம்மா வென்பவன் குளிர்ச்சி
தங்கிய ஒள்ளிய பிரகாசத்தைச் செய்கின்ற நாயகம் எம் மறைக்கும் தாயகம் நபிகட் பெருமானார்
நபி ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பாதங்களில்
தனது தலையை வைத்துக் களங்கமற அடிக்கடி துதித்து எழும்பித் தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தை
யுடையவர்களாகிய சஹாபாக்கள் யாவர்களுக்குங் குறைவில்லாது சலாமெடுத்துக் கூறி ஆசையோடும் தீனானது
எவ்விடத்தும் விளங்குக என்று சொல்லிப் புகழ்ந்துப் பரிமளத்தைக் கொண்ட புஷ்பங்களையுடைய
சோலைகளைக் கடந்து தான் தங்கியிருக்கும் திசையின்கண் போய்ச் சேர்ந்தான்.
|