பக்கம் எண் :

சீறாப்புராணம்

87


முதற்பாகம்
 

      திருத்தமாகச் செய்யப்பட்டிருக்கிற சுவர்க்கத்தினது மலக்குகளே! மற்றிடங்களிலுங் கூடியிராநின்ற மலக்குகளே! வருத்தமென்பதொன்றுமில்லாத எனது தூதரான முகம்மது நபியை ஆமினாவினது வயிற்றின்கண் யானின்று கருவாகவிருக்கச் செய்தேன், அதற்காக நீங்கள் உங்கள் மனங்களுள் மகிழ்ச்சி கொண்டு அலங்கரிக்கத்தக்கதாய் யாவையும் அலங்கரித்திடுங்களென்று சகல ஜீவாத்துமாக்களுக்குங் கடவுளான அல்லாகு சுபுகானகுவத்த தஆலா கட்டளையிட்டான்.

  

183. பரந்த வாய்க்கொடும் பாந்தளும் விடங்கொள் பஞ்சரமுங்

    கரிந்து பொங்கிய குழிகளுங் கனற்பொறி கதுவ

    வெரிந்து செந்நெருப் பொழுகிய நரகங்க ளேழும்

    விரைந்த வித்தடைத் திடுகவென் றனன்முதல் வேந்தன்.

18

     (இ-ள்) ஆதியரசனான மேலேகூறிய அல்லாகுத் தஆலாவானவன் விரிந்த வாயினையுடைய கொடிய சர்ப்பங்களையும் விடத்தைக் கொண்ட விடங்களையும் மிகச் சினந்து பொங்கிய தீப்பள்ளங்களையுமுடைய கனற்பொறி நீங்காது பற்றும்படி எரிந்து செந்நெருப் பொழுகா நிற்கும் நரகங்களேழினையும் விரைவாய்த் தணித்தடைத்திடுங்களென்று சொன்னான்.

     

184. விற்கெ ழுமறு சொடுகுறு சந்தரம் விளங்கச்

    சொர்க்க வாயிலுந் திறந்தலங் கரித்தனர் துன்ப

    மிக்க வாரிபாழ் நரகங்க ளடைத்தனர் வானோர்

    கற்கு மாமறை முதலவன் விதித்தகட் டளைக்கே.

19

     (இ-ள்) மலக்குளானவர் கற்கத்தகும் மாட்சிமைதங்கிய வேதத்தினையுடைய முதற்பொருளான ஆண்டவன் ஆக்கியாபித்த உத்தரவின்படி ஆகாய முழுவதும் விளங்கப் பிரகாசியா நிற்கும் அறுசுடன் குறுசையும் சொர்க்கத்தினது கபாடங்களையும் திறந்து அலங்கரித்தார்கள். துன்ப வகுப்பினவாகிய கடல்போலும் பாழான நகரங்களின் கபாடங்களை யடைத்தார்கள்.

 

185. அந்தண் பொன்னக ரடங்கலு மலங்கரித் ததுவும்

    வெந்த பாழ்நர கங்களை யடைத்தபல் விதமுஞ்

    சந்த திண்புய முகம்மது நபிதரித் ததுவு

    மிந்த வாறுக ளனைத்தையு மறிந்திபு லீசு.

20

     (இ-ள்) இபுலீசெனும் தெய்வத்துரோகியானவன் சந்தனக் குழம்பினைக் கொண்ட திண்ணிய புயங்களையுடைய நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் ஆமினா அவர்களது வயிற்றில் கருவாய்த் தரிபட்டதும், அழகுபொருந்திய