முதற்பாகம்
(இ-ள்) அவ்வாறு
கொடுக்க வீரர்களாகிய அந்த விருந்தினர்கள் பொருந்திய சீனியும் தேனுஞ் சேர்ந்ததைப்
போன்ற அன்னத்தையும் அவ்வன்னமானவை முங்கப் பெற்ற பாலையும் தங்களின் விலாவினது பக்கங்கள்
புடைக்கும் வண்ணம் அழகிய கைகளினால் அள்ளி வயிறானது நிறையும்படி யுண்டார்கள்.
2342.
மாத ருஞ்சிறு மைந்தரு
மாந்தரும்
பேத மற்றதம்
மில்லுறை பேர்களுங்
கோதி லாதுண்டு
பாலுங் குடித்தினிப்
போதும் போது மெனப்புகன்
றார்களால்.
15
(இ-ள்) அன்றியும்
பெண்களும் சிறிய பாலியர்களும் புருஷர்களும் மாறுபாடற்ற தங்களின் மாளிகையின்கண் தங்கிய மனிதர்களும்
களங்கமில்லாது அவ்வன்னத்தை அருந்திப் பாலையும் குடித்து இனி எங்களுக்குப் போதும் போதுமென்று
கூறினார்கள்.
2343.
உருசிக் கும்படி
பாகஞ்செய் யோர்படி
யரிசிச் சோறு
மரைப்படிப் பாலுநல்
வரிசை யாக வழங்க
வழங்கவே
பெருகித் தல்லது
பின்குறை வில்லையால்.
16
(இ-ள்) மதுரமாகப்
பாகஞ் செய்யப்பட்ட ஒருபடி அரிசியினது அன்னமும் அரைப்படிப் பாலும் நல்ல சிறப்பாய் வழங்க
வழங்கப் பின்னர் அதிகமாயினவே யல்லாமல் குறைந்திலன.
2344.
ஆகங் கூர்தர வுண்டவ ரியாவரும்
வாய்கை பூசி மகிழ்ந்தினி
துற்றபின்
பாகு வெள்ளிலை
பாளிதஞ் சந்தன
மோகை கூர வுவந்தளித்
தாரரோ.
17
(இ-ள்) சரீர
மானது கூர்தரும்படி சாப்பிட்டவர்க ளியாவரும் வாயையும் கையையும் கழுவிக் களித்து இனிமையுடன் தங்கின
பின்னர் சந்தோஷமானது மிகுக்கும் வண்ணம் விருப்புற்றுப் பாக்கு வெற்றிலை பாளிதம், சந்தன
மாகிய இவைகளைக் கொடுத்தார்கள்.
2345.
சோதி நாயகன்
றூதெனும் வள்ளலுக்
கீதெ லாமரி தோவென
வேத்திநின்
றோதிக் கையெடுத்
துற்றச லாமுரைத்
தாத ரத்தொடு மங்கவர்
போயினார்.
18
(இ-ள்) அவ்விடத்தில்
அந்த விருந்தினர்கள் பிரகாசத்தைக் கொண்ட நாயகனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின்
|