இரண்டாம் பாகம்
சுபுகானகு வத்த
ஆலாவுக்காக அன்பாய்த் தலையானது பூமியைத் தொடும் வண்ணம் தீனுல் இஸ்லாமென்னும் மெய்
மார்க்கத்தினர் செய்யும் ஒழுங்கினையுடைய வணக்கத்தை யியற்றி ஒரு மரத்தினது நீழலில்
தங்கியிருக்கும் அவ்விருவர்களும் காணாதபடி இளம் பருவத்தை யுடைய ஒரு வாலிபன் ஒளித்துப்
பார்த்து ஆச்சரியப்பட்டுக் கோபித்து நின்றான்.
2360.
குறித்துநோக்
கியசஃ தென்னுங் கொற்றவன் கருத்தி னூடு
வெறுத்திவ்வூ
ரிடைமக் காவில் விளைந்தவல் வினைக ளெல்லாம்
பொறுத்தது காணு
மென்னப் புழுங்கிப்பூம் பொழிலி னீழ
லிறுத்தவர்க்
கெதிர் கொடாம லெழுந்துபோ யுசைதைச் சார்ந்தான்.
15
(இ-ள்) அவ்விதம் தனது மனதின்கண் குறிப்பிட்டுப் பார்த்த சஃதென்னும் பெயரை யுடைய அம் மன்னவன்
அவர்களினது செய்கையைத் தனது சிந்தையின்கண் வெறுத்து மக்கமா நகரத்தில் உண்டான கொடிய
தீவினைகளை யாவும் இந்த மதீனமா நகரத்தினிடத்தும் வந்து தரித்தது காணுமென்று புழுக்க முற்றுப்
புஷ்பங்களை யுடைய அந்தச் சோலையினது நீழலின்கண் தங்கிய அவர்களுக்கு எதிர் கொடாமல் எழுந்து
சென்று உசைதென்பவனிடத்திற் போய்ச் சேர்ந்தான்.
2361. நறுங்கதிர் குலவு
மாட மக்கமா நகரி லாசிம்
பெறுங்குலத்
தொருவன் றோன்றப் பெரும்பகை விளைந்தவ் வூரு
முறங்கின செல்வ
மாறி யொருவருக் கொருவ ராகா
பறங்கிளர்
மனத்த ராகி மாறுபட் டிருந்தா ரன்றே.
16
(இ-ள்) அவ்வாறு சேர்ந்து நறிய கிரணங்கள் பிரகாசியா நிற்கும் மாடங்களை யுடைய மக்கமா நகரத்தில்
ஹாஷி மென்பவர் பெற்ற குடும்பத்தில் ஒருவன் பிறக்கப் பெரிய விரோதமும் பிறந்து அவ்வூரும்
செல்வமாறித் தூங்கிற்று. அங்குள்ளோர்களும் ஒருவருக்கு ஒருவர் ஆகாமற் கோப மோங்குகின்ற
மனத்தையுடையவர்களாகி மாறுபட்டிருந்தார்கள்.
2362.
அன்னவன் மாய
வஞ்ச மதத்தினு ளாயெ னன்னை
முன்னவள் மகனென்
முன்னோன் முசுயிபோ டிணங்கித் தோன்றி
யிந்நகர் தனையு
மார்க்கத் தீடுபட் டொழிய நின்றா
னுன்னுவ தென்கொ
னள்ளா ரூன்புலா லுணங்கும் வேலோய்.
17
(இ-ள்) சத்துராதிகளின் கொழும்புந் தசையும் உணங்கப் பெற்ற
வேலாயு தத்தை யுடைய உசைதே! என் தாயின் முன்னவனது மகனான எனது தமையன் அந்த ஹாஷிங் கிளையி
லுள்ளவனது
|