இரண்டாம் பாகம்
மாய வஞ்சகத்தை
யுடைய மார்க்கத்தி னுள்ளாகி முசுயிபென்பவனோடு பொருந்தி வெளிப்பட்டு இந்த மதீனமா
நகரத்தையும் இங்குள்ள மார்க்க வலிமையையும் கெடுக்கும் வண்ணம் வந்து நின்றான். இதற்கு நாம்
கருதுவதென்ன?
2363. மதியிலி யவராய்
மக்க மாநகர ரவரைப் போலிப்
பதியினிற்
புகுந்தும் பின்முன் பார்ப்பது பழுது கோறல்
விதியிது சரத
மென்னச் சகுதுளம் வெகுண்டு செந்தே
னுதிர்தரும்
படலைத் திண்டோ ளுசைதுநெஞ் சுழுக்கச் சொன்னான்.
18
(இ-ள்)
அவர்கள் இந்த மதீன நகரில் வந்து புகுந்தும் நாம் மக்கமா நகரத்தினரைப் போல்
அறிவிலாதவர்களாய் பின்முன் பார்ப்பது குற்றம், அவர்களைக் கொல்லுவதே வேதாகம முறைமை. இது
சத்தியமென்று அந்தச் சஃதென்பவன் தனது மனமானது கோபமுறப் பெற்றுச் செந்நிறத்தையுடைய மதுவானது
சிந்தா நிற்கும் மாலையை யணிந்த திண்ணிய தோள்களை யுடைய உசை தென்பவனின் உள்ளமானது
சுளுக்கும்படி கூறினான்.
2364. சாதுரை யெனும்வே
லுள்ளந் தைத்திட மார்க்க மாறும்
பாதக மிவ்வூ
ருள்ளும் படர்ந்ததோ பலருங் காணிற்
பேதுறு முன்ன
மியாமே பெரும்பகை துடைத்துக் கோடற்
கேதுபோ தஞ்சொ
லென்றா னிவனதற் கெடுத்துச் சொல்வான்.
19
(இ-ள்)
அவ்வாறு கூறிய சஃதென்பவனின் வார்த்தைகளென்னும் வேலாயுதமானது இருதயத்தின்கண் தைக்க,
உசைதென்பவன் சன்மார்க்கத்தை விட்டும் வேறுபடுந்துரோகச் செய்கையானது இந்த மதீனமா
நகரத்தின் கண்ணும் பரவிற்றோ? அவ்விதம் பரவியதை யாவருங் கண்டால் மன மயங்குவார்கள்.
அப்படி மயங்கும் முன்னர் அந்தப் பெரிய விரோதத்தை யாமே யில்லாது செய்து கொள்ளுவதற்குப்
புத்தி யாது? அதைக் கூறென்று கேட்டான். அக் கேள்விக்குச் சஃதென்பவனெடுத்துச் சொல்லுவான்.
2365.
குரவரி லொருவன்
முன்னோற் கொல்வதற் குலகங் கொள்ளா
தருமறை மாறி
நின்றோ ராருயி ரிழந்தா ரென்னத்
தெரிவரு மாற்றா
லுன்னைத் தெருபவ ரிலையான் கொன்றாற்
பரிவுறும்
பழியைச் சாருஞ் சாரவும் படுவ தன்றே.
20
(இ-ள்) பஞ்ச
குரவர்களி லொருவனான எனது தமையன் அசுஅதென்பவனைக் கொலை செய்வதற் கிவ்வுலக மானது கொள்ளாது.
அரிய முன்னுள்ள வேதத்தை விட்டும் மாறுபட்டு
|