இரண்டாம் பாகம்
நின்றவர்கள்
தங்களில் நிறைந்த ஆவியை இழந்தார்க ளென்று தெரியா நிற்குங் காரணத்தால் உன்னை வதை
செய்பவர்களொருவரு மில்லர். யான் அவனைக் கொலை செய்தால் அது துன்பத்தையுற்ற நிந்தையைப்
பொருந்தும். அதைப் பொருந்தவும் படாது.
2366.
அன்னதான்
மார்க்க மாறு மவருயிர் செகுப்ப வேண்டி
மின்னிய
கதிர்வாட் டாங்கி விரைகெனச் சகுது வீறாச்
சொன்னசொன்
மாறாது சைது கோறலைத் துணிந்து சென்றான்
மன்னிய
மலர்ந்தேன் றாது மாரியொத் துதிர்க்குங் காவில்.
21
(இ-ள்)
அவ்விதக் காரணத்தினால் நமது மார்க்கத்தை விட்டும் மாறுபட்ட அவர்களின் ஆவியை அழித்தலின்
பொருட்டுப் பிரகாசியா நிற்கும் ஒள்ளிய வாளாயுதத்தை யணிந்து விரைவிற் செல்லுவாயாக வென்று
சஃதென்பவன் பெருமையோடுஞ் சொன்ன வார்த்தைகளை உசை தென்பவன் கேள்வி யுற்று மறுக்காது
அதற்கிணங்கிக் கொல்லுதற் றொழிலை மனதின்கண் நிச்சயித்துப் பொருந்திய புஷ்பங்களினது
நறவத்தையும் மகரந்தங்களையும் மழையைப் போலும் பொழியா நிற்குமச் சோலையின்கண்
போயினான்.
2367.
மருங்கனில்
விசித்த கச்சும் வலக்கரந் தாங்கும் வாளுங்
கருங்கரிக்
கரத்தி னீண்ட கரந்தனி வீச்சுங் கோப
நெருங்கிய
நோக்கும் வேர்வை நித்திலப் பனிப்பு மாக
வொருங்கினிற்
சோலை புக்கு முசைதைக்கண் டைய முற்றார்.
22
(இ-ள்)
இடையிற் கட்டிய இடைக் கட்டும் வலது கையிற் றாங்கிய வாளாயுதமும், கரிய யானையினது
துதிக்கையினும் நீட்சியுற்ற இடது கையின் ஒப்பற்ற வீச்சும், நெருக்க முற்ற கோபத்தினது
பார்வையும், முத்தைப் போலுஞ் சிந்தா நிற்கும் வேர்வையுமாக அடக்கமாய் அச்சோலையின்கண்
வரும் உசைதென்பவனைக் கண்டு அவர்கள் சந்தேகித்தார்கள்.
2368.
இங்கிவ னிவ்வூ
ருள்ளார்க் கியல்புறுந் தலைவன் வேகந்
தங்கிய மனத்தி
னோடுஞ் சார்ந்தனன் சார்த னோக்கின்
வெங்கொலை
விளைத்தல் வேண்டு மெனவுரை விரித்துச் சொன்னார்
பொங்குசீர் அசுஅ
தென்போர் புண்ணிய முசுயி புக்கே.
23
(இ-ள்)
ஓங்கா நிற்கும் கீர்த்தியை உடைய அசுஅதென்பவர் அவ்வாறு சந்தேகித்துப் புண்ணியத்தை யுடைய
முசுயிபென்வருக்கு இந்த உசைதென்பவன் இம் மதீனமா நகரத்தி
|