பக்கம் எண் :

சீறாப்புராணம்

881


இரண்டாம் பாகம்
 

லுள்ளவர்களுக்குத் தகுதியான தலைவன், கோபமான துறையப் பெற்ற மனத்தினோடு மிங்கு வருகிறான். அவ்விதம் வருவதைப் பார்க்கு மிடத்து நம்மை வெவ்விய கொலைத் தொழிற் செய்தல் வேண்டும், என்று வார்த்தைகளை விரிவாயெடுத்துக் கூறினார்.

 

2369. வருபவன் றன்னை நோக்கி மனமுறு குவதன் றல்லா

      திருவரு ணம்பா லுண்டு தெருட்சியிற் சிறிது சொல்லால்

      விரைவொடு மவன்ற னுள்ளம் விளக்குவன் காண்டி ரென்ன

      முருகுலா அசுஅதுக்கு முசுயிபன் புறச்சொன் னாரால்.

24

(இ-ள்) அவ்விதஞ் சொன்ன வாசனை யுலாவா நிற்கும் அசுஅதென்பவருக்கு முசுயி பென்பவர் இங்கு வருகின்ற உசைதென்பவனைப் பார்த்து நீவிர் மனஞ் சுழலாதீர். நல்லது, நம்மிடத்தில் அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் தெய்வீகக் கிருபையான துள்ளது. சீக்கிரத்தில் அறிவினை யுடைய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது சில வசனங்களால் அவனது மனத்தைத் தெளிவிப்பேன், பாருமென்று அன்பானது பொருந்தும்படி சொன்னார். 

 

2370. மாரித்தண் ணலர்கள் சிந்தும் வனத்தினில் வடிவா ளேந்தி

      வீரத்தின் விழைவு கூர மென்மனம் புழுங்கி விம்மக்

      கோரத்தின் கடைக்க ணங்கிக் கொழுந்தெழ வுசைது நோக்கிப்

      பாரைத்தீன் படுத்தி நின்றோர் பயப்பட வெகுண்டு சொல்வான்.

25

     (இ-ள்) மழையைப் போலுங் குளிர்ச்சி தங்கிய புஷ்பங்களைச் சொரியா நிற்கும் அந்தச் சோலையின்கண் அவ் வுசைதென்பவன் கூரிய வாளாயுதத்தைக் கையிற் றாங்கி வீரியத்தினது விழைவதிகரிக்க, மெல்லிய இதய முட்டணித் தேக்கமுற, கொடுமையையுடைய கட்கடையில் நின்றும் அக்கினிக் கொழுந்தோங்க, இவ்வுலகத்தின்கண் ணுள்ள ஜனங்க ளனைவரையும் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தி னுட்படுத்தும்படி நின்ற அவர்களைப் பார்த்து அஞ்சும் வண்ணங் கோபித்துக் கூறுவான்.

 

2371. வியனுறு மக்க மூதூர் வேறுபட் டொழியச் செய்தோர்

      வயினுறைந் திவணின் வந்து வழிகெட மதீனத் தார்க்குப்

      பயிலுத றொடுத்தீர் மாற்றம் பகர்வது தவிர்ந்து நீங்கி

      யயலகல் வதுவே நுங்கட் கடவென வறிய வேண்டும்.

26

நீங்கள் பெருமை பொருந்திய மக்க மென்று கூறா நிற்கும் பழைய பதியி லுள்ளோ ரொருவர்க் கொருவர் பிரிதலுற்று அழியும் வண்ணம் செய்தோரான முகம்ம தென்பவரி னிடத்தி லிருந்து வந்து இங்குள்ள சன்மார்க்கமானது சிதையும் வண்ணம் இம்