இரண்டாம் பாகம்
மதீனமா
நகரத்திலுள்ளவர்க்களுக்குக் கற்பித்தற் றொழிலைத் தொடங்கினீர்கள். அவ்விதங்
கற்பிக்கும் வேற்றுமையை யொழித்து இவ்விடத்தை விட்டு மகன்று மற்ற விடங்களுக்குச் செல்லுவதே
உங்களுக்கு முறைமையென்று நீங்க ளுணர்தல் வேண்டும்.
2372.
என்னுரை
மறுத்திவ் வூரி லிருந்திரேற் குருதி சிந்த
மின்னவிர்
வடிவாட் காவி விருந்துசெய் திடுவன் வேறு
பன்னுவ
தென்கொல் சூழ்ச்சித் தருமத்தாற் பகர்ந்தே னென்றான்
பொன்னவி
ரலங்கற் றிண்டோட் புரவல னுசைதென் போனே.
27
(இ-ள்) எனது
வார்த்தைகளைத் தள்ளி நீங்கள் இந்த மதீனமா நகரத்தின் கண்ணிருப்பீர்களே யானால் உங்களி
னிரத்தஞ் சிந்தும் வண்ணம் ஒளிவு பிரகாசியா நிற்கும் எனது கூர்மை தங்கிய வாளாயுதத்திற்கு
உங்களது பிராணனை விருந்து செய்திடுவேன். வேறே கூறுவதென்ன? ஒன்றுமில்லை. இஃது நுண்ணறிவையுடைய
வேத தருமத்தினால் சொன்னே னென்று பொன் போலுமுதிரும் மகரந்தங்களை யுடைய பூமாலை யணிந்த
திண்ணிய தோட்களின் அரசனாகிய அவ்வுசை தென்பவன் கூறினான்.
2373.
கடுத்துநின்
ரைத்த மாற்றங் காவலன் முசுயி போர்ந்து
தொடுத்தெடுத்
துரைத்த வாய்மை யெங்கட்குச் சூழ்ச்சித் தாகு
மடுத்தவர்க்
கறமீ தன்றோ வாயினு மொருசொற் கேட்டென்
னிடத்தினிற்
சிறிது போழ்திங் கிருந்தெழுந் திடுக வென்றார்.
28
(இ-ள்)
அரசனாகிய அவ்வுசை தென்பவன் அவ்வாறு கோபித்து நின்று கூறிய வார்த்தைகளை முசுயி பென்பவ
ரறிந்து நீவிர் சேர்த்தெடுத்து எங்களுக்குக் கூறிய வார்த்தைகள் நுண்ணிய அறிவினைத் தரக்
கூடியனவே யாகும். சார்ந்தவர்களுக்கு இப்படிக் கூறுவதுவே தருமம். ஆனாலும் நீவிர் என்னிடத்திற்
சிறிதுநேரமிருந்து யான் கூறும் ஒரு வார்த்தையைக் கேட்டு விட்டு எழும்புவீராக வென்று சொன்னார்.
2374.
ஈங்கிவ
னுரைக்கும் வாய்மை யிதமல தயித மேனும்
பாங்கொடு
மறிவோ மென்றே யிதயத்துட் படுத்திக் கொல்லுந்
தீங்கினை
யொருபாற் சேர்த்திச் செவ்விதி னிருந்தான் செந்தேன்
பூங்குலாய்
விரிந்த சோலைப் புதுநிழற் பரப்பி னன்றே.
29
(இ-ள்) அவ்வாறு சொல்ல, உசை தென்பவன்
இவ்விடத்திலிவன் கூறும் வார்த்தைகள் நன்மை, அல்லது
|