இரண்டாம் பாகம்
தீமையை யாயினும்
முறையுடன் தெரிகுவோமென்று அச்சொல்லைத் தன் மனசி னிடத்துக் கிடத்திக் கொலை செய்யக்
கருதி வந்த கொடுமையை யோரிடத்தி லாக்கிச் செவ்வையாக செந்தநிறத்தினது நறவத்தைக் கொண்ட
புஷ்பங்கள் பொருந்தி மலர்ந்த அந்தச் சோலையினது புதிய பிரகாசத்தை யுடைய பரப்பாகிய
நிலத்தின்கண் ணிருந்தான்.
2375.
ஒருவனை யிறசூல்
தம்மை யுளத்தினி லிருத்தி யார்க்குந்
தெரிதரப் பிசுமி
லோதித் தீன்முதன் முறைமைத் தாய
விரிதருங் குறானை
யோதிக் காட்டினர் விளைந்த தீமைக்
கருவெனு நினைவு
சிந்திக் கட்டழிந் தோட வன்றே.
30
(இ-ள்) அவனவ்வித மிருக்க, முசுயி பென்பவர் ஒப்பற்ற ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவையும் நாயகம் நபி றசூல்
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களையும், மனதின்கண் ணிருத்தி யாவருக்கும் தெரியும்படி அங்கு
விளைந்த பொல்லாங்கின் கருவென்னும் சிந்தனையானது சிதறி முற்றுமழிந்தோடும் வண்ணம்
ழுபிஸ்மில்லா ஹிர்றஹ்மா னிர்றஹீழு மென்று முதலிலோதி அதன் பின்னர் தீனுல் இஸ்லா மென்னும்
மெய் மார்க்கத்தினது ஆதி முறைமைத் தான விரிவினை யுடைய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தின்
வசனத்தை யோதிக் காட்டினார்கள்.
2376.
மூதுரை மறையின்
றீஞ்சொன் முசியிபாண் டுரைப்பக் கேட்டுக்
காதுளங்
குளிர்ந்து பொல்லாக் கசடெறிந் தறிவி னாழ்ந்து
பாதகம் பலியா
வண்ணம் பாரிற்றொல் விதியி னாலிம்
மாதவங்
கிடைக்கப் பெற்ற தின்றென மகிழ்வு கூர்ந்தார்.
31
(இ-ள்) முதுமையான வசனங்களை யுடைய புறுக்கானுல் அலீமென்னும்
வேதத்தினது இனிய வார்த்தைகளை முசுஹி பென்பவர் அவ்வாறு அங்கு கூற, அவற்றை அவ்வுசை தென்பவர்
கேள்வியுற்றுச் செவிகளும் மனமும் குளிர்ச்சி யடையப் பெற்றுப் பொல்லாங்கை யுடைய குற்றங்களை
வீசி அறிவின்கண் மூழ்கித் துரோகமானது வாய்க்கப் பெறாது இவ்வுலகத்தின்கண் ஊழ் விதியினால்
இந்தப் பெருமையை யுடைய தவமானது இன்றையத் தினம் நமக்குக் கிடைக்கப் பெற்றதென்று சந்தோஷ
மடைந்தார்.
2377.
நிலத்தும்விண்
ணிடத்து முற்றோர் நின்றநன் னெறியு மீதே
சொலத்தகாத்
தூயோன் றூதென் றுண்மையிற் சொல்வ தீதே
பொலத்தினி
லமைத்த சொர்க்கம் புகுத்திவிப் பதுவு மீதே
நலத்தகு முறைமை
யீதென் றகத்தினி னாட்டி னாரால்.
32
|