இரண்டாம் பாகம்
(இ-ள்)
அவ்விதஞ் சந்தோஷ மடைந்து இப் பூலோகத்தின் கண்ணும் வான லோகத்தின் கண்ணு முற்றவர்கள்
நிற்கப் பெற்ற தன்மை பொருந்திய சன்மார்க்கமு மிது தான், கூறற் கரிய பரிசுத்தனான அல்லாகு
சுபுகானகு வத்த ஆலாவின் றசூலென்று சத்தியமாய்ச் சொல்வது மிது தான், பொன்னினாற் செய்த
சொர்க்கலோகத்தின்கண் புகுதச் செய்வது மிது தான், இஃதே நன்மை பொருந்திய முறைமையென்று
மனதினிடத்து நிற்கச் செய்தார்.
2378.
மனத்தினன்
மகிழ்ச்சி கூர்ந்து முசுயிபைப் போற்றி மன்ன
ரினத்தினு
முயிரின் மிக்கா யெனவெடுத் தினிய கூறிக்
கனத்தநூன்
முறையின் வாய்த்த நபிகலி மாவை யோதிச்
சினத்திடர்க்
குபிரை மாற்றித் தீனிலை நெறிநின் றாரே.
33
(இ-ள்) அவ்வாறு நிற்கச் செய்த அவர்
மனதின்கண் நல்ல சந்தோஷமான ததிகரிக்கப் பெற்று அந்த முசுயிபென்பவரைப் புகழ்ந்து
அரசர்களாகிய எமது பந்துக்களிலும் எம்முயிரிலும் மேலானவ! என்றினிமையான வார்த்தைகளை
எடுத்துச் சொல்லிப் பெருமை பொருந்திய புறுக்கானுல் அலீமென்னும் வேத நூலினது முறைமையிற்
சிறந்த நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் ழுலாயிலாஹ
இல்லல்லாகு முஹம்மதுர் றசூலுல்லாஹிழு என்னும் கலிமாவைக் கூறிக் கோபத்தினது இடைஞ்சலை யுடைய
குபிர் மார்க்கத்தை யொழித்துத் தீனுல் இஸ்லாமென்னும் நிலைபரத்தை யுடைய சன்மார்க்கத்தில்
தரிபட்டார்.
2379.
உள்ளகம்
பொருந்தி யீமான் கொண்டுசை தென்னும் வேந்தர்
வள்ளலா ரிருவர்
செவ்வி மதியெனும் வதன நோக்கிக்
கொள்ளுமென்
மனத்தினுற்ற குறிப்பெனுங் கரும மின்னே
விள்ளுதல்
செவிக்கொள் வீரேன் றணிபெற வியத்திச் சொல்வார்.
34
(இ-ள்) உசை
தென்று கூறா நிற்கும் அம்மன்னவர் அவ்வாறு தமதிருதயத்தின்கண் பொருந்த முற்றீமான் கொண்டு
வள்ளன்மையை யுடையோர்களான அம் முசுயிபு, அசுஅதென்னு மிருவர்களின் அழகிய சந்திரனைப் போன்ற
முகங்களைப் பார்த்து எனது மனதின்கண் யான் கொண்ட பொருந்திய கருத்தென்னுங் கருமம் இப்போது
கூறுவதை நீங்கள் காதினாற் கேட்பீர்களாக வென்று சிறப்பாகப் புகழ்ந்து கூறுவார்.
2380.
பூதலத் துயர்ந்த மேன்மைப் பொறையினி லறிவின் மிக்கான்
மாதவ ருரைக்கும்
வேத வழிமுறை யொழுகி நின்றான்
காதுவெங் களிறே
யன்ன கருதலர்க் கரியே றொப்பான்
சாதெனு மரச
னிவ்வூர்த் தலைவரிற் றலைமை யானே.
35
|