முதற்பாகம்
(இ-ள்) கரும்பென்று
சொல்லாநின்ற வினிய சொல்லினையுடைய ஆமினா அவர்களுக்கு இன்பம்பொருந்த வரும் மூன்றா
மாதத்திலே நல்ல நபிப்பட்டம் பெற்ற நூகு அலைகிஸ்ஸலாமவர்கள் சொப்பனத்தின் கண்வந்து
ஆமினாவே! உனது பிள்ளையானவர் மிகுந்த சத்தியத்தையும் விளங்கிய விஜயத்தையுமுடையவர், அவரின்
தகுதியாகிய பெயர் முஹம்மதாயிருக்குமென்று மனத்தாராளமாய்த் திருவாய் மலர்ந்தருளிப்
போயினார்கள்.
193.
திங்க ணான்கினி
லாமினா கனவினிற் றெளிவா
யிங்கி தத்திபு
றாகிநன் னபியியம் பினராற்
சங்கை யாய்மிகு
வரிசையும் பெருங்கொலுத் தனையும்
பொங்கு
வாழ்வினர் பெயர்முகம் மதுவெனப் போந்தே.
28
(இ-ள்) கருப்பமாகிய நான்கா மாதத்திலே
ஆமினாவினது சொப்பனத்தின் கண் இனிமையையுடைய நல்ல நபிப்பட்டம் பெற்ற
இபுறாகீமலைகிஸ்ஸலாமவர்கள் வந்து ஆமினாவே! உனது பிள்ளையானவர் மதிப்பாய் மிகுத்த வரிசையும்
பெரிய உல்லாச வீற்றிருப்பனளவும் பொங்காநின்ற வாழ்க்கையுமுடையவர், அவரின் பெயர்
முஹம்மதாகுமென்று வெள்ளிதாய்த் திருவாய் மலர்ந்தருளினார்கள்.
194.
செம்பொற்
பட்டுடுத் தெறிகதி ரணியிழை திருத்திப்
பம்பு மேகலை
தரித்துமென் கரவளை பரித்துக்
கம்ப லைச்சிலம்
பணிந்தனர் பதங்கவின் பெறவே.
29
(இ-ள்) ஆமினா அவர்கள் அழகிய
பொன்னாலியன்ற குடத்தின் கண்ணுள்ள அருவி நீரினால் ஸ்நானஞ் செய்து சிவந்த பொன்னூலினையுடைய
பட்டாடையை யுடுத்திப் பிரகாசம் வீசுகின்ற அழகிய ஆபரணங்களை யணிந்து செவ்வைப்படுத்தி
நெருங்கிய மேகலாபரணத்தைப் பூண்டு மெல்லிய விரண்டு கைகளிலும் வளையற்களைத் தரித்து சிற்றடிக
ளழகுபெறும்படி கலீரென்று மொலியினையுடைய சிலம்புகளைப் புனைந்து.
195.
நெறித்த வார்குழ
லிறுக்கிமென் மலர்பல நிறைத்துக்
குறித்த
வேலிணைக் கண்களி லஞ்சனங் கோட்டிச்
செறித்த
மான்மதஞ் சந்தனக் கலவையுந் திமிர்ந்தே
யெறித்த
நன்கதிர் விளக்கென வாமினா வெழுந்தார்.
30
(இ-ள்) மடிப்புக் கொண்ட நெடிய
கூந்தலைக் கொண்டையாக விறுகச்செய்து மெல்லிய பலவிதமான மலர்களை யதன்மீது நிறைத்துக்
குறிக்கப்பட்ட வேற்படைபோலு மிரண்டு
|