இரண்டாம் பாகம்
சமாச்சாரங்களை இறைவனான அல்லாகு
சுபுகானகு வத்த ஆலாவின் றசுலாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் காதுகளினாற் கேள்வியுற்று இனிமையையுடைய மகத்தான வேத நெறியுடன் அவர்கள்
விளங்கும் வண்ணங் கூறத் தொடங்கினார்கள்.
2432. அரும்பொருள் வேதமுந்
தீனி னாக்கமும்
பெரும்புவி யிடத்தினிற்
பெருக நாளுமவ்
விரும்பதி யிடத்துறைந்
திருப்ப வென்மனம்
விரும்பிய துங்கடம்
நட்பின் மேன்மையால்.
22
(இ-ள்) உங்களது நேசத்தின்
மேன்மையினால் அரிய உண்மையையுடைய புறுக்கானுல் அலீமென்னும் வேதமும் தீனுல் இஸ்லாமென்னும் மெய்
மார்க்கத்தினது செல்வமும் பெரிய இந்தப் பூலோகத்தின் கண் எந்நாளும் அதிகரிக்கும்படி அந்தப்
பெருமையை யுடைய திருமதீனமா நகரத்தின் கண் வந்து தங்கியிருக்கும் வண்ணம் எனது இதயமானது ஆசித்தது.
2433. எமக்கணு வெனுமிட ரியையு மேனுமர்
தமக்குவந் தவையெனுந் தகைமை
வேண்டுமால்
கமைக்கருத் தொடுமவ ணுறைவன்
காணுங்குங்
குமக்குவ டெனும்புயக் கொற்ற
வேந்தரே.
23
(இ-ள்) குங்குமத்தினாலான
மலையைப் போலும் தோள்களையுடைய விஜயத்தைக் கொண்டு அரசர்களே! யான் பொறுதியை யுடைய சிந்தையோடும்
அந்தத் திரு மதீனமா நகரத்தின் கண் வந்து தங்குவேன். எமக்கு அணுப்போ லாயினும் துன்பங்கள்
வந்து சேருமாயின் அந்தத் துன்பங்கள் உங்களுக்கு வந்தவைக ளென்று கூறும் பெற்றி வேண்டும்.
2434.
என்றுநன் நபியிவை யியம்ப
வீறொடு
மன்றலம் புயபறா வென்னு மன்னவர்
நன்றுநன் றெனக்கலி மாவை நாட்டிய
வென்றிய னவையினில்
விளம்பு வாரரோ.
24
(இ-ள்) என்று
இவைகளை நன்மையை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் கூற, பெருமையுடன் வாசனையைக் கொண்ட அழகிய தோள்களினது பறா வென்று கூறும்
அபிதானத்தையுடைய அரசரானவர் நல்லது! நல்லது!! என்று ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர்ற
சூலுல்லாஹிழு யென்னுங் கலிமாவை நிலை நிற்கச் செய்த விஜயத்தை யுடைய அந்தச் சபையின் கண்
சொல்லுவார்.
|