பக்கம் எண் :

சீறாப்புராணம்

903


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அழகிய மேகக் குடையையுடைய நபிகட் பெருமானே! நாங்கள் சொல்லிய இந்தப்படி களங்க மில்லாது செய்குவோ மென்று செவ்வை யாகிய குணத்தினது சிந்தனையோடும் வலக்கை சேர்த்துத் தருகின்றோம். இப் பூமியின் கண் எங்கள் வார்த்தைகளில் யாதொரு குற்றமுமில்லையென்று சொன்னார்கள்.

 

2439. முகம்மது நபிக்கெதி ருண்மை வாசக

     மிகலறத் திறல்பறா விசைப்பக் கேட்டிவண்

     புகல்வது பொறுமினென் றுரைத்துப் புந்தியி

     னகமகிழ் கைதமென் பவரி யம்புவார்.

29

     (இ-ள்) நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுக் கெதிரில் வல்லமையை யுடைய பறா வென்பவர் அவ்வாறு விரோதமான தற்றுப் போகும் படி சத்தியத்தை யுடைய வார்த்தைகளைச் சொல்ல, அறிவினால் மன மகிழ்வு பெற்ற கைத மென்னும் அபிதானத்தில் தமது காதுகளினாற் கேள்வியுற்று இவ்விடத்தில் நீவிர் கூறுவதை நிறுத்துமென்று கூறிப் பின்னர் சொல்லுவார்.

 

2440. இறையவன் றூதுவ ரிசைத்த நன்மொழிக்

     குறிதிகொண் டெழில்பறா வுரைத்த மாற்றமே

     பெறுமுறை யாயினு மின்னும் பேச்சினிற்

     சிறுமொழி யொன்றுண்டென் றுரைத்துச் செப்புவார்.

30

      (இ-ள்) யாவற்றிற்க்கும் இறைவனான ஜல்ல ஷகுனகு வத்த ஆலாவின் றசூலாகிய நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கூறிய நன்மை பொருந்திய வார்த்தைகளுக்கு அழகிய பறா வென்பவர் உண்மை கொண்டு சொல்லிய வசனங்கள் நாம் பெறக் கூடிய ஒழுங்கினை யுடையனவே யானாலும் இன்னும் அப்பேச்சுக்களின் பேச வேண்டிய சிறிய ஓர் வார்த்தையுள்ள தென்று கூறிச் சொல்லுவார்.

 

2441. மாரிவிண் டணிதிகழ் மக்க மாநகர்ச்

     சீரியர் தமக்குமெம் மரபின் செல்வர்க்கும்

     பேர்பெறும் வசனநிண் ணயத்தின் பெற்றியா

     லீரமற் றொல்லையி னிகலு மில்லையால்.

31

      (இ-ள்) மேகங்களால் நீரைப் பொழியப் பெற்று அலங்காரங்களானவை பிரகாசியா நிற்கும் திரு மக்கமா நகரத்தினது சிறப்பினை யுடையோர்களுக்கும் எங்களது கிளையிலுள்ள செல்வர்களுக்கும் கீர்த்தியைப் பெற்ற உறுதி